அழகு பற்றிய சில மேற்கோள்கள்  
- அழகு என்பது ஆண்டவனின் அருட்கொடை.
 - அழகே உண்மை. உண்மையே அழகு.
 - அழகும் அபத்தமும் உடன்பிறந்தவை.
 - அன்பின் குழந்தையே அழகு.
 - முகத்தின் அழகு முறிந்து போகும் அணிகலன்..
 - அழகில் அடைவது மகிழ்ச்சியும் இனிமையும்.
 - அழகை உருவாக்கும் அணிகலன் மனமகிழ்ச்சி.
 - அழகும் அடக்கும் அமைவது அரிது.
 - அழகின் ஆட்சிக்காலம் அற்பமானது.
 - பணிவில்லாத அழகு காம்பில்லாத மலர் போன்றது.
 - அழகை வெளிப்படுத்தும் அறிவுள்ள வழி அதை மறைத்தல்.
 - அழகு உண்மையின் ஒளி.
 - அழகு இயற்கையானது, ஏற்படுத்தப்படுவது அல்ல.
 - காணப்படும் அழகு காண்பவனின் கண்களிலும் உள்ளது.
 - அழகிய நபரின் நற்குணம் அழகுக்கு அழகு செய்யும்.
 - அழகானதெல்லாம் நல்லதல்ல - ஆனால் நல்லதெல்லாம் அழகு.
 - இனிய அழகு இறைவனின் கையெழுத்து.
 - நல்லியல்பற்ற அழகு நறுமணமற்ற மலர்.
 
