என்றைக்கும் போல் தான் இன்றும் விடிந்தது. காலையில் பள்ளி 9.30க்கு வந்தால் போதும் என சுற்றறிக்கை வந்ததால் தாமதமாகவே [ என்றைக்கு சீக்கிரம்????!!!!] கிளம்பினேன். ஆனால் நான் கிளம்பிய நேரத்திற்கு 9.00 மணிக்கெல்லாம் பள்ளியில் இருந்திருக்க வேண்டியவள்.
என் கிரகம் ஹவுஸ் ஓனர் வடிவில் வாசலில் வந்து நின்றது. ஆம். குருவிக் கூட்டைக் கலைப்பது போல் மாடியில் செல்லமென நான் வளர்ந்திருந்த தங்கங்களை அப்புறப்படுத்தக் கூறினார். ஏனெனில் மாடியில் வசிக்கும் குடும்பத்தார் சில நாட்களாக காய்ச்சலால் அவதியுறுகின்றனர். காரணம் கொசுவாக இருக்கலாம் என மாநகராட்சித் துறையினர் சந்தேகித்து பார்வையிட வந்திருந்தனர். அவர்கள் செடிகளில் தண்ணீர் தேங்கி இருக்கலாம்[ ஆனால் நானோ ஒரு டம்ளர் அளவிற்கு மட்டுமே தண்ணீர் ஊற்றுகின்றேன்]. நேற்று பெய்த மழை தண்ணீர் தேங்கி இருப்பதாகக் காட்டியிருக்கிறது. 
A    Flashback
காக்கை இட்ட எச்சங்கள் வேம்பு செடிகளாக உயர உயர வளர்ந்திருந்தது. ஏற்கெனவே ஹவுஸ் ஓனர் அதனை அப்புறப்படுத்தக் கூறியிருந்தார். வளர்ந்தபின் அப்புறப்படுத்துதல் ஆகாது என சப்பைக்கட்டு வேறு.
அந்த வேம்பு செடி என் friend . ஆம். எப்போ நான் மேல் மாடி சென்றாலும் அவள் அசைவு அதிகமாகவே இருக்கும். நானும் மற்ற செடிகள் அசைகின்றனவா என செக் செய்வதுண்டு. என் எண்ணமோ  பிரமையா அது எனக்குப் பிடித்து இருந்தது.
வளர்த்த பெண்ணை நல்ல இடம் பார்த்து மனம் முடிக்க யாரும் பாடு படும் பெற்றோர் போன்ற நிலைமை எனக்கு. என் தோழியை நல்லிடம் சேர்ப்பது எவ்வாறு என சிந்திக்கையில் என் நினைவுக்கு வந்தார் என் பள்ளியில் உடன் பணிபுரியும் சகோதரர் ஸ்ரீதர் சாரும் என் வகுப்பு மாணவர்களும் தான். அவரிடம் கேட்டிருந்தேன். சரி என்றிருந்தார். என் வகுப்பிலும் கேட்டேன்,"மரம் நடுவதில் யாருக்கேனும் ஆர்வம் உள்ளதா", என்று. எப்போதும் போல் சுதன் தன் கையை உயர்த்தியது மனதுக்கு ஆறுதல் தந்தது. அப்துல் கலாம் பிறந்த நாளின் போது மரம் நடுதலை ஒரு event ஆக வைத்து விடலாம் என எண்ணி இருந்திருந்தேன்.   .      .  
Flashback over 
இன்று தம்பிகள் என்னை சரமாரியாகத் திட்டி தீர்த்து விட்டனர். சொந்த வீடு போல் எதற்காக இப்படி செடிகள் நட்டு கஷ்டப்படுத்துகிறாய் என்று. திட்டினாலும் அப்புறப்படுத்த உதவினார்கள். இரண்டு மூன்று செடி பைகளை கில் பார்க் அருகில் வைத்து விட்டு வரச்  சொன்னேன். ஏனெனில் செடிகள் மீது ஆர்வம் உள்ள வேறு எவரேனும் அதற்கு ஆதரவு தரக்கூடும் என ஆழமாக நம்பினேன். தம்பி இரு பைகளை கொண்டு வைத்து விட்டு வந்தான். இதற்கு இடையில் ஹவுஸ் ஓனர்  கொஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள். [நல்லவங்க தான்]  இதற்கு காரணம் நாங்க இல்லைனு சொன்னார். ஆனால் நான் வைத்திருந்த செடிகள் எல்லாம் mosquitto repellent தான். அந்நேரம் வந்திருந்த மாநகராட்சி பணியாளர்கள் இதனை நாங்கள் அப்புறப்படுத்தக் கூறவில்லை அதற்கு பதிலாக தள்ளி தள்ளி வைக்கவே அறிவுறுத்தினோம் என்றார். 
இவ்வேலைகளை செய்யச் செய்ய கண்களில் இருந்தது கண்ணீர் அடக்க மாட்டாமல் வந்த வண்ணமாகவே இருந்தது. இருந்தும் செய்தென். அக்கா சில செடிகளை அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாகக் கூறியது ஒரு மிகப் பெரிய ஆறுதல்.இடையில் பள்ளிக்கு போன் செய்து பெர்மிஷன் or லீவு சொன்னேன். ஆனால் கண்டிப்பாக declaration form  என் மாணவர்களுக்கு தர வருவேன் எனக் கூறினேன். இதைக்  கூறக்  கூட முடியாமால் துக்கம் தொண்டையை அடைக்க பேசினேன். ஒரு வழியாக 10 மணிக்கு மேல் புறப்பட்டு 10.30க்கு பள்ளியை அடைந்தேன். போகும் போது வேம்புகளை வண்டியின் முன்புறம் வைத்து எடுத்துச் சென்றேன். எங்கள் தலைக்கு மேல் உயர்ந்திருந்த செடியுடன் நாங்கள் வண்டியில் செல்வதை சிலர் விநோதமாகவே பார்த்தனர். என் பள்ளி பின்புற மருத்துவமனை வாயிலில் வாட்ச்மேனிடம் சொல்லி ஓரமாக வைத்துவிட்டு பள்ளி உள்ளே சென்றேன். பள்ளியில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரங்கோலி competition நடத்தினார்கள். என்னை மூன்று நடுவர்களில் ஒருவளாக அனுப்பித்தார்கள். பலரும் நன்றாகவே செய்திருந்தனர். Judgement வேலை  முடிந்தபின் எக்ஸாம் முடியும் தருவாயில் 12.45 க்கு என் மாணவர்களை சென்று கண்டு declaration  form மற்றும் சலான் கொடுத்து விட்டு நான்கு நாள் லீவு முடிந்து பரிட்சைக்கு வரும் போது பாடங்களை நன்கு படித்து வர அறிவுறுத்தி வழியனுப்பினேன். அப்போது சுதனை நிறுத்தி மரக் கன்றை கொண்டு வந்திருக்கும் செய்தியை கூறினேன். நடுவது எங்கே என்று கேட்டதற்கு playground என பதில் வந்தது. Let God bless him abundantly    
மதியம் சுதனிடம் என் வேம்புகளை  எடுத்துச் செல்ல சொல்லியிருக்கிறேன். மற்றவை அடுத்த போஸ்ட்-ல் தொடர்கிறேன். என் வேம்பு நல்லிடம்சென்று விடுவாள் என்ற நம்பிக்கையுடன் நான் முத்தாரம்.