வியாழன், 29 மே, 2014

சித்தர்கள் போற்றி ( 108 முறைகள் )



சித்தர்கள் போற்றி ( 108 முறைகள் )
திங்கள்            -    ஓம்  ஸ்ரீ சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
                  ஓம்  ஸ்ரீ உரோம மகரிஷி திருவடிகள் போற்றி         
                  ஓம்  ஸ்ரீ திருமூலர் திருவடிகள் போற்றி

செவ்வாய்    -    ஓம்  ஸ்ரீ போக மகரிஷி திருவடிகள் போற்றி 
                 ஓம்  ஸ்ரீ புலிப்பாணிச் சித்தர் திருவடிகள் போற்றி

புதன்        -    ஓம்  ஸ்ரீ அகத்தியர் திருவடிகள் போற்றி
                 ஓம்  ஸ்ரீ இடைக்காடர் திருவடிகள் போற்றி


வியழன்                 ஓம்  ஸ்ரீ அகப்பைச் சித்தர் திருவடிகள் போற்றி
                  ஓம்  ஸ்ரீ சுந்தரனந்தர் திருவடிகள் போற்றி                  
                  ஓம்  ஸ்ரீ காகபுஜண்டர் திருவடிகள் போற்றி 
                  ஓம்  ஸ்ரீ பதஞ்ஜலி முனிவர் திருவடிகள் போற்றி


வெள்ளி                    ஓம்  ஸ்ரீ கொங்கணச் சித்தர் திருவடிகள் போற்றி
                  ஓம்  ஸ்ரீ சட்டைனாதர் திருவடிகள் போற்றி 
                  ஓம்  ஸ்ரீ குதம்பைச் சித்தர் திருவடிகள் போற்றி


சனி                        ஓம்  ஸ்ரீ கருவூர் முனிவர் திருவடிகள் போற்றி
                   ஓம்  ஸ்ரீ பாம்பாட்டிச் சித்தர் திருவடிகள் போற்றி


ஞாயிறு                 ஓம்  ஸ்ரீ தேரையர் திருவடிகள் போற்றி


கார்த்திகை நட்சத்திரம் -  ஓம்  ஸ்ரீ கோரக்கர் திருவடிகள் போற்றி



சித்தர்கள் துதி

நந்தியகத்தியர் மூலம் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
கந்திடைக் காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார் கொங்கணவர் மாகாலாங்கி
சிந்தியழகண்ணரகப்பையர் பாம்பாட்டித்
தேரையரும் குதம்பைச் சட்ட சித்தர்
செந்தமிழ்ச்சீர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தித்தே அணியாகச் சேர்த்து வாழ்வோம்.

புதன், 28 மே, 2014

காரிய சித்தி மாலை – விநாயர் துதி

காரிய சித்தி மாலை – விநாயர் துதி
பந்தமகற்றும் அனந்த குணப்பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டிருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங்கலைகள்  அனைத்தும் எவன் பால் தகவருமோ
அந்த இறையாங் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

உலகம்  முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருளெவனவ்
உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டும் களைகண் எவ்ன்ந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணமடைகின்றோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் அரிவிழும் பஞ்செனமாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம்  எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணமடைகின்றோம்.

செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவின் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப் புரிந்து சரணமடைகின்றோம்.

வேதம் அளந்தும் அறிவறிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிழும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணமடைகின்றோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய்  நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணமடைகின்றோம்.

பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்குமவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியை திகழச் சரணமடைகின்றோம்.


சுபம்         

வெள்ளி, 16 மே, 2014

maadi thottam - tamil

மாடி தோட்டம் 

pupi - malayalam

tamil train songs for sairam


train rhymes for sairam







kid sairam playing

புதன், 14 மே, 2014

படித்ததில் பிடித்தது - அழகு

அழகு பற்றிய சில மேற்கோள்கள் 
  1.  அழகு என்பது ஆண்டவனின் அருட்கொடை.
  2. அழகே உண்மை. உண்மையே அழகு.
  3. அழகும் அபத்தமும் உடன்பிறந்தவை.
  4. அன்பின் குழந்தையே அழகு.
  5. முகத்தின் அழகு முறிந்து போகும் அணிகலன்..
  6. அழகில் அடைவது மகிழ்ச்சியும் இனிமையும்.
  7. அழகை உருவாக்கும் அணிகலன் மனமகிழ்ச்சி.
  8. அழகும் அடக்கும் அமைவது அரிது.
  9. அழகின் ஆட்சிக்காலம் அற்பமானது.
  10. பணிவில்லாத அழகு காம்பில்லாத மலர் போன்றது.
  11. அழகை வெளிப்படுத்தும் அறிவுள்ள வழி அதை மறைத்தல்.
  12. அழகு உண்மையின் ஒளி.
  13. அழகு இயற்கையானது, ஏற்படுத்தப்படுவது அல்ல.
  14. காணப்படும் அழகு காண்பவனின் கண்களிலும் உள்ளது.
  15. அழகிய நபரின் நற்குணம் அழகுக்கு அழகு செய்யும்.
  16. அழகானதெல்லாம் நல்லதல்ல - ஆனால் நல்லதெல்லாம் அழகு. 
  17.  இனிய அழகு இறைவனின் கையெழுத்து.
  18. நல்லியல்பற்ற அழகு நறுமணமற்ற மலர். 

நன்றி - Tamil-Quotes-Moral
 

என் பிள்ளை

என் பிள்ளை 
உன்  எச்சிலுணவு
       எனக்கு அமிர்தம்
உன் உளறல்
      எனக்குக் கவிதை
உன் தடுமாற்றம்  
      எனக்கு பரதம்
உன் சிணுங்கல் 
      எனக்கு இன்னிசை
உன் மழழைக் கிறக்கத்தில்
உன் முத்தம் தரும் உன்மத்தத்தில் - மகனே
என்னையே  நான் மறந்தேன் -  நான்
சிறு சிறு தவறுகளையும்
எல்லை மீறல்களையும்
மன்னிக்காத ஒரு
மாண்புமிகு ஆசிரியை என்பதை.