Education For All: How to Make money Online Using Adf.ly: Adf.ly is a new and modern method of make money online at home .This site shorts your links, and the best thing is that it will pay you fo...
செவ்வாய், 10 மார்ச், 2015
ஞாயிறு, 8 மார்ச், 2015
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015
பிரவுஸியதில் பிடித்தது,
Compu Comedy
P1 : நான் தான் Lord of Internet தெரியுமா?
: எப்படி ?
: ஏன்னா என் பெயர் மகாலின்கேஷ்வர் (மகா -Hyper - Link)ஆயிற்றே!
Why Linux has cat command?
To control the mouse !? ! ...
Why is the cat moving around the computer?
To catch the mouse?!
டச் ஸ்க்ரீன் கம்ப்யூட்டர் உருவானதன் காரணம் என்ன?
mouse - க்கு மவுசு போனதால்.
கவி பாரதி கணிப்பொறியாளர் ஆக இருந்திருந்தால் அவர் பெயர் என்னவாக இருந்திருக்கும்?
கணி பாரதி
கம்ப்யூட்டர் திருக்குறள்:
1. Copy paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
Coding செய்து சாவார்.
2. எம்மொழி மறந்தார்க்கும் Job உண்டாம் job இல்லை
Java -வை மறந்தவர்க்கு.
3. Bug கண்டுபிடித்தாரை ஒறுத்தல் அவர் நாண
Debug செய்து விடல்
4. கற்க கசடற கம்ப்யூட்டர் - ல் கற்றபின்
சேர்க்க ஷேர் செய்ய.
5. டிவிட்டரினால் டிவிட்டிய செய்தி சிறிதெனினும்
Trend -ன் மாணப் பெரிது.
Sardharji in a computer class
Sir : What is Microsoft Excel?
Sardarji : It is a new brand of Surf Excel sir !!??..
Sir : >:-(
Life Before Computer [ BC]
- Memory was something that you lost with age
- An application was for an employment
- A program was a TV show
- A cursor used profanity. [cursing ]
- Keyboard was a Piano
- A web was a spider's home
- A virus was the flu
- A CD was a bank account
- A hard drive was a long trip on the road
- A mouse pad was where mouse lived.
Top ten Free Learning Websites For Kids [ International Level]

உலக தாய்மொழி தினம்
உலக தாய்மொழி தினம் - 21.02.2015
அம்மா - பிள்ளைக்கு உலகம்.
உலகத்தை பிள்ளைக்கு சொல்லித் தர தாய் பயன்படுத்தியது மொழி, அதன் வழி பிள்ளைகளை பண்படுத்தினாள் .
அத்தகு தாய்மொழியின் தினத்தைக் கொண்டாடுவது என் தாயையே கொண்டாடுவது போல் ஆகும்.
என் தாய் மணிவயிரம் தந்த மணிமொழியாம் தமிழ் மொழிக்கும், உலகின் பிற மொழிகளுக்கும், அம்மொழி மாந்தர்களுக்கும் அடியேனின் வாழ்த்துக்கள்.

சனி, 7 பிப்ரவரி, 2015
நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
மீனாவிற்கு கல்யாணம் !
நான் வாழ வைப்பேன் என்ற அப்பவோ விண்ணில் விண்மீனாய்!
அசலை விட வட்டி (பேரன் பேத்தி) தான் சுவாரசியமானது என்ற அம்மாவோ விடி வெள்ளியாய்!
அன்பை தந்து அரவணைக்க அக்கா அண்ணன் தம்பி இதற்கும் மேல் சொந்தங்கள் பூம்பாதையாய்!
மண்ணில் நல்ல வண்ணம் வாழ மாதவன் வெங்கடேசன் ஆலயத்தில் சுப்ரபாத நேரத்தில் துயில் எழும் இறைவன் துயிலால் தான் பெற்ற ஆற்றலை வாரி வழங்க வாரியாய் !
சுற்றம் சூழ வாழ்வை துவங்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள் !
மதுரையின் இளவலுக்கு, மதுரையின் நாயகியை அண்ணன் கேசவனின் கையால் கண்ணிகா தானம் !
நாள் : 09.02.2015
இடம் : சின்ன திருப்பதி, காருவள்ளி , சேலம்.
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வீர்களாக! வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
ஞாயிறு, 11 ஜனவரி, 2015
அப்பாவின் ஓர் இருமல்
நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
மனதிற்கு ஓர் ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.
மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
மனதிற்கு ஓர் ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.
சனி, 27 டிசம்பர், 2014
உயிரெழுத்தில் அம்மா - எங்கள் உயிர்
அன்பு
ஆருயிர்
இணைபாலம்
ஈசுவரரூபம்
உன்னதம்
ஊட்டு(க்கு)வித்தவள்
எளிமை
ஏணியானவள்
ஐவரைப் பெற்றவள்
ஒளியானவள்
ஓய்வற்றவள்
ஒளஷதமானவள்
அன்பும் அறனும்
ஆருயிரும் ஆசுவாசுமும்
இனிப்பும் இன்பமும்
ஈரமும் ஈகையும்
உள்ளமும் உவகையும்
ஊழ்தவமும் ஊதியமும் (முற்பிறவி பயன்)
எண்ணமும் எழுச்சியும்
ஏற்றமும் ஏழிசையும்
ஐம்பூதமும், ஐநிலமும்
ஒப்புரவும் ஒழுக்கமும்
ஓதலும் (விருந்து) ஓம்பலும்
ஒளவையும் ஒளஷதமுமானவள்
அன்னமிட்ட அன்னை
ஆசையாய் என்னை
இயல் இசையாய்
ஈன்றபொழுதின் பெரிது
உவக்க உவகையாய்
ஊக்குவித்து முழுமையாய்
என்னை எனக்கறிவித்து
ஏதும் அறிவிக்காமல்
ஐயன் பாதத்தில்
ஒளியாக கார்த்திகையில்
ஓசையின்றி போனாளே!
ஒளவியம் பேசுகிறேன்
அஃதும் அவளில்லாததால்!
ஞாயிறு, 14 செப்டம்பர், 2014
ஆசை
சுத்தியாய் நீதி சொல்ல ஆசை
வத்தியாய் வாசம் வீச ஆசை
மத்தாப்பாய் புன்னகைக்க ஆசை
கித்தாப்பாய் நிலைத்திருக்க ஆசை
தத்தம் கொள்கையில் நின்றிருக்க ஆசை
நித்தமிறை நினைவிலிருக்க ஆசை
புத்தனைப் போல் உய்விக்க ஆசை
யுத்தமில்லாமல் வாழ ஆசை
சத்தமில்லாமல் சாக ஆசை
சுத்தமாய் வெளிச்சம் சேர ஆசை
சனி, 6 செப்டம்பர், 2014
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
இன்று ஆசிரியர் தினம்
இன்று ஆசிரியர் தினம்
குருவே சரணம் !
மாதபிதா குரு தெய்வம்.
யாரெல்லாம் ஆசிரியர்?
நன்றெது தீதெது என உணர்த்தும் யாரும் ஆசிரியரே!
அப்படியாயின் அனுதினமும் திட்டி திட்டி வைரமாக்கும் அன்னையும் ஆசிரியரே!
அன்பு காட்டி அரவணை த்துச் செல்லும் ஆசிரியரும் அன்னையே!
பாசம் என்ற பரிசளித்தாகிலும் பண்பாளனாக்கும் தந்தையும் ஆசிரியரே!
தப்பென்ற பட்டபோது தன் நண்பனை வலிந்து கூறி நன்னெறிக்குய்ப்பவனும்
ஆசிரியரே!
குடிமைப்பண்பினை குற்றவாளிக்கும் வாழ்வால் வாழ்ந்து உணர்த்தும் யாரும் ஆசிரியரே!
வாழ்வியல் நெறிகளை வளர்விக்கும் எவரும் ஆசிரியரே!
குழந்தையானாலும் ஏதோ ஒரு வகையில் பெரியவர்களுக்கு பாடம் புகட்டும் மழலைகளும் ஆசிரியரே!
ஆசிரியர் தினமான இன்று, சமுதாயம் வளர அ, ஆ முதலாகிய உயிர்களையும், க், ங் முதலாகிய மெய்கயளையும் றௌ நௌ வரை முடியும் உயிர் மெய்களையும் கற்பித்து ஃ - ஐ ஆயுதமாக கொண்டு அடுத்தடுத்து ஏணிப்படிகளாய் சிறு வார்த்தை, வாக்கியம் , பத்தி, பக்கம், பக்கங்கள் என வளர்வித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்த வயதின்மையால் வணங்குகிறோம்.
என் சுசீலா டீச்சருக்கு என் ஆத்மாவின் வணக்கமும் ஆசி யாசிப்பும் வேண்டுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
என் சுசீலா டீச்சருக்கு என் ஆத்மாவின் வணக்கமும் ஆசி யாசிப்பும் வேண்டுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
வாழ்க ஆசிரியர் குலம்! வளர்க மாணவர் நலம்! பெருகுக சமுதாய வளம்!
வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014
சுதந்திர தின வாழ்த்துக்கள்
சுதந்திர
தின
வாழ்த்துக்கள்
இனிய இந்தியா,
ஒன்றல்ல இரண்டல்ல இருநூறு ஆண்டுகளுக்கு மேல் கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு இதே போன்ற ஆகஸ்டு 15 வெள்ளிக் கிழமை அன்று இரவில் இஷ்டமான சுதந்தரத்தைப் பெற்றெடுத்தாய்.
நீ பெற்றெடுத்த பிள்ளையோ தறுதலைப் படுத்தப் பட்டது, தகப்பனாகிய காந்தியத்துவம் இல்லாத காரணத்தால். உன் பிள்ளையின் பெயரால் மதிக்கப்பட வேண்டியவர்(வை)கள் மிதிக்கப்படுகிறார்கள்.
பசுமை மிகு இந்தியா பஞ்சம் நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது. காடுகள் அடுக்ககங்களாக மாறி வருகின்றன. காட்டின் விலங்குகள் நாட்டின் மக்களை பதம் பார்க்க பல இடங்களில் பயமுறுத்துகிறது.
உன் குழந்தையைக் காக்க மீண்டும் வேண்டும் நல்ல பல மனித அவதாரங்கள். ஐந்து விரல்கள் வேறானாலும் கை ஒன்றாகும். மதங்கள் பலவானாலும் மொழிகள் வேறானாலும், கலாசாரங்கள் பல விதமானாலும் கூட்டுக் குடித்தனத்தில் வேறுபாடுகள் பல மறந்திருந்தாய். பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பினாய் அப்போது. ஆனால் இப்போதோ வேறுபாடுகளை மனதில் கொண்டு குடிக்கும் நீரையும் கூட பகிர மனமற்றிருக்கிறது உன் பிள்ளை. ஒரு கண் சுண்ணாம்பையும் மறு கண் வெண்ணையையும் பூசிக் கொண்டிருக்கிறது. நட்புப் பாலங்கள் பலப்பட வேண்டிய நிலையில் உன் பிள்ளையின் குடித்தனக்காரர்களின் ஆற்றுப் பாலங்கள் விரிசல் கொண்டுள்ளன. பொதுவுடைமை ஆக வேண்டிய ஆற்று நீரோ தனியுடைமை பெற்றுள்ளது
பணக்கார வேடத்தில் பிச்சையும் பிச்சைக்கார வேடத்தில் சம்பதிப்பதுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் நன்னெறியில் கத்தியின்றி ரத்தமின்றி கடந்து நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையுமாக உன் 68 வயது பிள்ளை மாபெரும் சபைகளில் மென்மேலும் மாலைகள் விழ வெற்றி நடை போட்டு வாழ்வாங்கு வாழ சுதந்திர இந்தியாவிற்கு 68 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
padmaarunac .blogspot .in
ஞாயிறு, 15 ஜூன், 2014
தந்தைக்கு நன்றி
கண்ணில் புலப்படவில்லை எனினும் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் தன் முத்திரையை ஏதாவது ஒரு ரூபத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் தந்தை அமரர் மு.அருணாசலம் அவர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.
என் பதினொன்றாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய போது படிக்க சிரமப்பட்ட என்னை ஹாஸ்டலுக்கு வரும் போதெல்லாம் படிப்பித்துக் கொடுத்த தந்தைக்கு நன்றி.
என் முதல் வகுப்புப் பள்ளியிலிருந்து மாற்றலாகி வரும் போது என்னைப் பாராட்டி நல்ல பள்ளிகளில் நல்ல நல்ல கல்வியை நான் விரும்பும் படி எல்லாம் படிக்க வையுங்கள் என்று கூறிய பள்ளித் தலைமையாசிரியரின் விருப்பப் படி எனக்கு மேம்பட்ட கல்வி வாய்ப்புகளைத் தந்த தந்தைக்கு நன்றி,
மகளென்றாலும் மரியாதையைக் கெடுக்காத, மதிப்பு மிக ஆசிரியையாக என்னை உருக் கொடுத்த தந்தைக்கு நன்றி,
தன்னம்பிக்கை தந்து துன்பக் கடலில் துவண்டாலும் வழி தவறாமல் வாழும் நெறிப்படுத்திய தந்தைக்கு நன்றி,
முதலில் கை பிடித்து நடை பழக்கியும், பின்பு கைவிட்டு நடக்க மேற்பார்வையிட்டு நடை தவ(ள)றும் போது கை தூக்கியும் , என்றும் விடாது கடவுள் போல் கண்ணுக்குப் புலப்படாது கை கொடுத்து வரும் எங்களது ஆருயிர் தந்தைக்கு நன்றி,
வாழும் முறைமையை நேரடியாகவும் , வாழக்கூடாத முறைமையை மறைமுகமாகவும் படிப்பித்த எங்களது ஆருயிர் தந்தைக்கு நன்றி,
நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
மனதிற்கு ஓர் ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.
மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாமல் வாழ்கின்ற தந்தைக்கு நன்றி,
from

சின்ன வயசுல
அப்பாவோட கைய பிடிச்சிக்கிட்டு
ஒரு துணிக்கடைக்கு போன
ஞாபகம் இருக்கு..
அப்பாகிட்ட
காசு கம்மியாதான்
இருக்கும்னு தெரிஞ்சும்
விலை அதிகமா உள்ள
ரெடிமேட் சட்டைதான்
வேணும்னு
அடம்பிடிச்சி வாங்குனது
இன்னும் என் கண்ணுல நிக்குது..
அந்த தீபாவளிக்கு
அப்பா தனக்குனு
ஒரு வேட்டி கூட எடுத்துக்கல..
இதுவும் நல்லா நெனைப்பிருக்கு..
இன்னைக்கு
அதே துணிக்கடைக்கு
அப்பாவோட போனேன்..
விலை அதிகமா உள்ள
ரெடிமேட் சட்டை
அப்பாவுக்கு
எடுத்துபோட சொன்னேன்..
உடனே அப்பா,
"ஏன்டா அவ்ளோ விலையில..
எனக்கு அதெல்லாம் வேணாம்டா..
உனக்குதான்டா சரிப்பட்டுவரும்..
எனக்கு கம்மி ரேட்லயே வாங்குடா.."
அம்மா மட்டும் தெய்வமில்லை..
அப்பாவுந்தான்..

வியாழன், 5 ஜூன், 2014
செவ்வாய், 3 ஜூன், 2014
முதல் அனுபவம்
இன்று பள்ளி முதல் நாள். லீவுக்குப் பிறகு பள்ளி செல்வது சுவாரசியமாக உள்ளது. நட்பு வட்டத்தையும், அதட்டி அரவணைக்கும் ஆசிரியக் கூட்டத்தையும் காணும் ஆர்வம் மிகைப்பட்டது. ஸ்கூல் பஸ் வரும் ஹாரன் சௌண்டு கேட்டது. பஸ் மேல மேடு போய் திரும்பிவருவதற்கு எப்படியும் பத்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் பஸ் ஸ்டாப்க்கு ஓட வேண்டும். அரைகுறையாக பின்னப்பட்ட இரட்டை சடைகளை தொங்கவிட்டுக்கொண்டு பைக்குள் கருப்பு ரிப்பன்களை நுழைத்துக் கொண்டு அவசரமாக பஸ் ஸ்டாப் நோக்கி ஒடினாள் விஜி. ஓட ஓட பஸ் அருகில் வரும் சத்தம் கேட்டது. சில சமயங்களில் பஸ் கடந்து போய்விடுவதுண்டு. பல நேரங்களில் டிரைவர் அவள் பக்கம் பார்த்து அடையாளம் கண்டு விட்டால் சில நிமிடங்கள் வைட் செய்வார். இன்று எப்படியோ?!
விஜி படிப்பதென்னவோ அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. 4 கிலோ மீட்டர் கடந்து பயணிக்கவேண்டிய பெண் பிள்ளைகளின் நலன் கருதி அரசாங்கம் காலையிலும் மாலையிலும் பயணிக்க மாணவிகளுக்காகவே பிரத்தியேகமான சலுகை வழங்கியிருக்கிறது (மகளிர் மட்டும்/ மாணவியர் மட்டும்). எட்டாவது வரை அருகிலிருந்த உயர்நிலைப்பள்ளியில் படித்த விஜிக்கு தன் அக்காவைப் போன்று பஸ்ஸில் சென்று படிக்கும் அனுபவத்தைப் பெற ஆசை. அப்பாவும் அவள் ஆசைக்கு தடை விதிக்கவில்லை. அக்கா ஆங்கில வழியில் படிக்கிறாள். விஜி தமிழ் மீடியம் என்றாலும் அப்பாவின் வழி காட்டுதலில் அக்காவிற்கு இணையாக ஆங்கிலத்தில் சக்கை போடு போடுவாள். ஆமாம் அப்பா பி.எஸ்.சி மற்றும் பாலிடெக்னிக் படித்தவர். மேற்கொண்டு படிக்க வசதியும், இல்லற வாழ்வும் இடம் தரவில்லை. இருந்தும் பி.எஸ்.சி படிப்பை கல்யாணத்திற்குப் பிறகு அம்மாவோட உதவியால்தான் படித்தார். உதவின்னா ஹோம்வொர்க் ரெகார்ட் வொர்க் இதெல்லாம் தான். அப்பா நைட் ஷிப்ட் டூட்டி பார்த்து பகலில் கல்லூரிக்குச் செல்வது என இரட்டைக் குதிரையில் லாவகமாகவே பயணம் செய்தவர். அப்பா கல்லூரி படிக்கும் கால கட்டத்திலேயே சுஜி, விஜி என்ற கட்டித் தங்கங்களை வெட்டுப்படாமல் சுகமாகத் தந்தாள் அம்மா.
எப்படியோ பஸ் வரவும் விஜி பஸ் ஸ்டாப் வரவும் சரியாக இருந்தது. அவள் அக்காவோ ரொம்ப பெர்பெக்ட் நேரம் தவறாதவள். முன்னாடியே பஸ் ஸ்டாப் வந்து விட்டாள்.
விஜி எப்பொழுதும் டிரைவருக்குப் பின் இரண்டாவது இருக்கையில் அமருவதுதான் வாடிக்கை. அதேபோல் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு இருக்கையை வழக்கப்படுத்தியிருந்தார்கள். மறந்தும் கூட அடுத்தவர் இருக்கையில் அமர்வதில்லை. அப்படி அமர்ந்து விட்டாலோ பஸ் முழுக்க ஒரே களேபரம் தான். எனவே பொது நலன் கருதி இடம் மாறிக்கொள்வதில்லை. மாறினாலும் நட்புக்குள் மட்டுமே நடக்கும்.
ஆலடி பஸ் ஸ்டாப் வந்தவுடன் பஸ் நின்றது. பல மாணவிகளுடன் உமாவும் ஏறினாள். வழக்கம் போல எனது முன் இருக்கையில் அமர்ந்தாள். விஜிக்கு ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடிக்கும். அடுத்து கடக்க இருக்கும் ஃபாத்திமா கான்வென்ட் அவளது விருப்பத்திற்கு உகந்த ஒரு இடம்.
அப்பள்ளியுள் மாணவர்கள் காலைக் கூட்டம் முடித்து வகுப்புகளுக்கு சீராக வரிசையில் செல்லும் அழகு கண்ணுக்குப் புலப்படும். பார்த்த மாத்திரத்தில் இப்பள்ளியுள் நமக்கு ஒரு இடமில்லையே என ஏங்கத் தொடங்கும். நாமும் ஆங்கில வழியில் படித்திருக்கலாமோ என மனம் அசை போடும். தற்போது படிக்கும் பள்ளியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து இதே கதைதான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு காட்சி கண்ணில் புலப்படும். அம்மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் அழகும், பள்ளி மேடையில் செய்து காட்டும் பல்வேறு நிகழ்வுகளும் அவளுக்குள் பலவித எண்ன மாறுதல்களை ஏற்படுத்தி ஊள்ளது. மேலும் அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களில் சிலர் அங்கு படிக்கிறார்கள். அவர்கள் கூறும் பல விஷயங்கள் மிகையான வியப்பினை தரும்.
அதற்காக விஜி தன் பள்ளியை தரக்குறைவாக நினைக்கவில்லை அவளுடைய மானசீக குரு சுசீலா டீச்சர் அங்கு தானே இருக்கிறார்கள்.
இவ்வாறாக வியப்பும் தன் படிப்பில் அக்கறையுமாக பள்ளிப்படிப்பையும் கல்லூரிப்படிப்பையும் முடித்தாள். இதோ அவளது விருப்பத்திற்கு உகந்த ஃபாத்திமா கான்வென்டுக்குள் கணிணி ஆசிரியப் பணியிட இண்டெர்வியூக்கு(நேர்முகத் தேர்வு) அப்பாவுடன் போய்க்கொண்டிருக்கிறாள். உள்ளுர பயமும் ஆர்வமும் மிகுந்திருந்தது அதை வெளிக் காட்டாமல் சதாரணமாக அமரச் சொன்ன இடத்தில் அமர்ந்தாள் அவள் முறை வந்த போது உள் அழைக்கப்பட்டாள். அப்பாவும் உடன் நுழைந்தார்.
அங்கு வெள்ளை உடை அணிந்த கன்னிகாஸ்திரி அமர்ந்திருந்தார். Sr.நிர்மலா என்ற பெயர் பலகை அவரது பெயரை தெரியப் படுத்தியது. அவரது பார்வை தெளிவு மிகுந்திருந்தது. அதனால் மரியாதை அவளையறியாமல் மனதை நிரப்பியது.
வழக்கமான தகுதி பற்றிய விசாரிப்புகள் நடந்தேறின. பிறகு தம் பள்ளி இந்த வருடம் தான் மேல்நிலைப் பள்ளி தரத்திற்கு உயர்த்தப்பட்டதாகக் கூறினார். அனைத்தும் ஆங்கிலத்திலேயே உரைத்தார். விஜிக்கோ புரிந்தது. மேலும் பள்ளிக்குள் பாடம் நடத்துவதும, உரையாடுவது என அனைத்தும் கண்டிப்பாக ஆங்கிலத்தில் மட்டுமே இருத்தல் வேண்டும் என்றார். வயிற்றில் ஏனோ புளி கரைத்தது. விஜி தன்னம்பிக்கையில் ஆங்கிலத்தில் ஒருவாறாக பேசிச் சமாளித்தாள். அப்பா இடை இடையே சில விசயங்களை ஆங்கிலத்திலேயே அழகாகப் பேசியதும் மிகுந்த தெம்பை அளித்தது. முடிவை பின்பு தெரியப்படுத்துவதாகக் கூறி தேர்வை நிறைவு செய்தார்.
அப்பாவுடன் வீடு திரும்பிய விஜிக்கு இருப்புக் கொள்ளவில்லை. முடிவை தபாலில் எதிர் பார்த்தாள். போஸ்ட் மேனும் வந்து சென்று விட்டார். இன்றைய பொழுதும் ஏமாற்றமே மிஞ்சியது. தன்னை விட நல்ல ஆசிரியர் கிடைத்திருப்பார் என எண்ணிக் கொண்டாள் விஜி.
மாலை ஒரு ஆறு மணி இருக்கும், பெரிய மீசையுடன் ஒரு மனிதர் வாசல் கதவைத் தட்டினார். வாசலுக்கு வந்து பார்த்த விஜியிடம் நாளை பள்ளிக்கு பணியில் வந்து சேருமாறு சிஸ்டர் நிர்மலா சொல்லியனுப்பியதாகக் கூறினார். அவர் அப்பள்ளியின் வாட்ச் மேன்.
பல வண்ண பட்டாம் பூச்சிகள் பறந்த மனதுக்குள் இறைவா நன்றி என்ற விஜி நாளை பள்ளி வந்து சேருவதாகக் கூறி அனுப்பினாள்.
ஒரு பொருளைக் குறித்து தீவிரமாக எண்ணும் போது அப்பொருள் எப்படியும் வசப்படும் என்ற எம்.எஸ்.உதயமூர்த்தியின் புத்தக வரிகள் எவ்வளவு உண்மை. நினைத்தால் புல்லரிக்கிறது. தான் வியந்து பார்த்த பள்ளிக்குள் தனக்கு வேலை கிடைத்தது ஆனந்தமாக இருந்தது.
விடிந்ததும் குளித்து முடித்து அக்கா உதவியுடன் சேலை அணிந்து, செவ்வனே பள்ளிக்குப் புறப்பட்டாள். இன்று பள்ளி முதல் நாள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)