செவ்வாய், 12 ஜூலை, 2016

Praying birth day blessings

தந்தையும் தாயும் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் இன்றைய தேதியில் அன்றொரு நாள் என்னை ஈன்று புறந்தந்தனர்.


புதன், 8 ஜூன், 2016

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

mathapitha: நினைவலைகள்

mathapitha: நினைவலைகள்:                                                  இப்போதெல்லாம் எந்த இழப்பும் பேரிழப்பாகத் தெரிவதில்லை தந்தை, தாய் எனும் பெரும் பொக்கிஷத்தை...

திங்கள், 7 மார்ச், 2016

ஒரு ராத்திரி - நல் சிவராத்திரி வாழ்த்துக்கள்

வேண்டத்தக்கது அறிவோய் நீ! எம் இறைவா! ஈசா! மகேசா! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

எதிர் வீட்டு வாசல் சுவற்றில் லிங்கம் எண்ணையால் வரைந்திருந்ததைப் பார்த்த எனக்குள் ஆச்சரியங்கள் பல பூத்தது.ஏனெனில் அவர்கள் ஒரு கிறித்துவ குடும்பத்தினர். இது எப்படி சாத்தியம்? ? ? ?

மனது குடைந்ததில் சில நொடிகளிலேயே விடை கண்டேன். ஆம் அவர்கள் வரைந்தது என்னவோ சிலுவைதான்! ஆனால் அத்தோற்றம் ஊறி லிங்கமாகக் காட்சி அளித்ததில் எல்லாம் சிவம் என புளகாங்கிதம் அடைந்தேன். அவ்வெண்ணம் மேலும் பரிணமித்து இஸ்லாமின் சின்னம் பிறை வடிவையும் நம் ஐயன் தலையில் சூடி உள்ளதை மனது நினைந்த மாத்திரத்தில் அன்பே சிவம் ! அது எந்த மதமாயினும்! எனக் கண்டு கொண்டேன்! இதைத்தான் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி! சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி என விநாயகர் அகவலும் கூறுகிறதோ!


                      திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.



நன்றி :- know-your-mantras.blogspot.in


சனி, 13 பிப்ரவரி, 2016

இயற்கை நமது வரப்ரசாதம்

காடுகளைக் காப்போம் காடுகளை வளர்ப்போம் காடெங்கும் இருந்தால் தான் நாடு செழிக்கும்.

இயற்கை நமது வரப்ரசாதம் அதை வறட்சிப் பிரதேசம் ஆக்கி விட்டால் நம் நிலைதான் என்ன?

Let Nature be our teacher

வெள்ளி, 15 ஜனவரி, 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

அன்று பெய்த மழையில் அரும்பாடுபட்டு 
ஆடிப் பட்டம் தேடி விதைத்து 
இனிய பொங்கலன்று விளைச்சலை இன்பத்தோடு 
ஈன்றெடுத்த பிள்ளைகளுடன் ஈசன் அருள் நாடி 
உறவுகள் கூடி உள்ளபடி உழவனை, 
ஊனையும் உயிரையும் காக்கும் இயற்கையை 
எண்ணத்தால் கோல வண்ணத்தால் வணங்க 
ஏலக்காய் மணத்துடன் பச்சரிசிப் பால் பொங்கி 
ஐயன் அருணனுக்கும் வருணனுக்கும் நன்றி பாராட்ட 
ஒரு முத்தான வாய்ப்பு ! கொண்டாடுவோம்
ஓங்கி வளர்ந்த கரும்பு, மஞ்சளோடு !
அஃதே எமது விருப்பும் வாழ்த்தும்!
உழவில்லாமல் உணவில்லை! உணவில்லாமல் உயிரில்லை!
உழவால் உயர்! உழவே உயிர்!
உயிரைக் காப்போம் பாரம்பரியத்துடன்!
உழவை வணங்குவோம்! உழவனுக்குத் தோள் கொடுப்போம்!
உழவர் தினத்தில் என்றும் இன்பம் தங்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !




வெள்ளி, 8 ஜனவரி, 2016

MY DRAWING





my drawing

அம்மா தைத்த ஆடையை அணிந்ததில் இருந்த இன்பம் கோடி ரூபாய் பெருமானமுள்ள ஆடையில் வரவில்லையே! அன்னையை எங்கு தேடுவேன்! இன்பத்தை என்று மீண்டும் காண்பேன்!


புலி  பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இது தானோ!


கலிகாலத்தில் புலி புல்லைத் தின்று விடுமோ, இப்பூவை உண்டு விடுமோ என்று ஐயுறுகிறாளோ இப்பூவை!


ஞாயிறு, 3 ஜனவரி, 2016

தமிழ் இராமாயணம்

தமிழில் இராமாயணம் படிக்க நான் வலைத்தளத்தில் தேடி உலாவியதில் எனக்குக் கிடைத்த pdf. ஆசிரியர் பெரிய மனதுடன் பகிர்ந்திருந்த இதனை மேலும் பலரைச் சென்றடைய விரும்பி அதற்கான இணைப்பை இங்கு இணைக்கிறேன். பலன் பெறுக!

தமிழ் இராமாயணம் 

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மழை வரத்தை சாபமாக்கியது யார் குற்றம்?

mazhaiyin saatchi

வீடியோ உபயம்  - தமிழ் வானம் 

வாரித் தந்த வள்ளல் 
மாரித் தாயின் மகவு 
ஊரைக் காக்க ஊற்றும் 
ஏரித் தண்ணீராய் ஏற்றம் 
பெற்ற நீரைப் 
பேணிக் காப்போம்!

நீர் வளம் காக்க இயலாத பலருள் நானும் ஒருவள் முத்தாரம் 

செவ்வாய், 10 நவம்பர், 2015

தங்கைக்கு தலை தீபாவளி - வாழ்த்துக்கள்

                                தாய் தந்தை இல்லாமல் அண்ணனின் முயற்சியில் புக்ககம் சென்றாள் தங்கை. அவளின் தலை தீபாவளி - ஆனால் அன்னை இறந்த வருடாந்திரம் முடியாத காரணத்தினால் முறையான தீபாவளி இல்லை என்றாலும் கடவுளுக்கு படையல் என்ற ஒன்று இல்லாமல் சாதாரணமாக சிறு விருந்து செய்தோம். மனது நிறைய மண்ணில் அடங்கிய பெற்றோர் நிறைந்திருக்க, கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா அம்மா நன்றிகளால் நிறைகிறது எங்கள் மனது. உங்கள் ஆசியை தினம் தினம் யாசிக்கிறேன். மனம் நிறைய உங்களை பூஜிக்கிறேன். வாழ்வின் வளம் பொங்க தவிக்கிறேன். நானும் பிறந்தேன் என்றில்லாமல் என் பிறப்பு சரித்திரமாக மாற நான் தகுதியானவளாக, சரித்திரமாக்க பத்மா அருணாசலம் அருள வேண்டும்.

புதன், 15 ஜூலை, 2015

கர்மவீரர் காமராஜர் மண்ணில் உதித்த தினம் இன்று!

தாத்தாக் கைப் பிடித்து வாக்கிங் போகவும், போகும் வழியில் அவர் அனுபவங்களைக் கேட்கவும், அவருக்குச்  சலிப்பு வந்தாலும் சளைக்காமல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலடையவும், பாட்டியின் அணைப்பில் பல கதைகள் கேட்டு வாழ்வின் நிதர்சனத்தை உணரவும் கொடுப்பினை வேண்டும். அக்கொடுப்பினை ஏனோ எனக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் வாய்க்கவில்லை. அதனால் அம்மாவிடம் தாத்தா பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவள் சொல்வதுண்டு, "எங்க அப்பா ரொம்ப  ரொம்ப ரொம்ப ... நல்லவர். நம்ம காமராஜர் மாதிரி", என்று. அதனால் தானோ என்னவோ எனக்குக் காமராஜர் மீது மிகப் பெரிய ஈர்ப்பு. "கிராமத்தில் தற்போது எங்கள் பெயரில் இருக்கும் வீடு காமராஜர் அருளியது. ஒரு சமயம் எங்கள் ஊர் தீ விபத்துக்கு (1950 -60) உள்ளான போது வசித்த வீடுகள் எல்லாம் விபத்தில் நாசமாகியது. அது சமயம் புணர் வாழ்விற்காக எம் ஊர் மக்களுக்கு வீடு கட்டி அவ்வீ டுகளுக்கு மக்களை உரிமை தாரர்கள் ஆக்கினார்  காமராஜர்", என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். விளம்பரம் எதுவும் தேடிக்காத வியத்தகு மனிதர். நல்லவராகவே வாழ நாம் விரும்பினாலும் மாய உலகம் நம்மில் பல சபலங்களை உற்பத்தி செய்து விடுகிறது. அவற்றை எல்லாம் கடந்து நல்லவராய் பிறரை வாழ்விப்பதில் வல்லவராய், சபலங்களுக்கு ஆட்படாமல் வாழ்ந்ததாலேயே  அவர் கர்ம வீரர்! அவருக்கு என் கவிதாஞ்சலி! 
உன் பெயரோ காமராஜ் !
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும்  நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்  
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய்  !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!





புதன், 1 ஜூலை, 2015

தலை கவசம் உயிர் கவசம்

இன்று ஜூலை 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயத் தலை கவசம் அணிதல் சட்ட முறை அமுலுக்கு வந்தது. இன்று காவல் துறை அலுவலர்கள் கூட தலைக் கவசம் அணிந்து சென்றது மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது.