புதன், 11 மார்ச், 2015

சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? - எப்படி தடுப்பது ? – கிட்னி ஹெல்த் டிப்ஸ் - By Mathavi [downloaded from Internet ]

சிறுநீரக கோளாறு

                         நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.
                                          பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
                                                  அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
                                       பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
                                அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
                           சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
                               இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
               விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
                               மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.
                                          இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

நன்றி - http://moonramkonam.com/

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

பிரவுஸியதில் பிடித்தது,

Compu Comedy 


P1  : நான் தான் Lord of Internet தெரியுமா?
  :   எப்படி ?
  :   ஏன்னா என் பெயர் மகாலின்கேஷ்வர் (மகா -Hyper  - Link)ஆயிற்றே!

Why Linux has cat command?
To control the mouse !? ! ...

Why is the cat moving around the computer?
To catch the mouse?!

டச் ஸ்க்ரீன் கம்ப்யூட்டர் உருவானதன் காரணம் என்ன?
mouse - க்கு மவுசு போனதால்.

கவி பாரதி கணிப்பொறியாளர் ஆக இருந்திருந்தால் அவர் பெயர் என்னவாக இருந்திருக்கும்?
கணி பாரதி

கம்ப்யூட்டர் திருக்குறள்:
1. Copy paste செய்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
    Coding  செய்து  சாவார்.

2. எம்மொழி மறந்தார்க்கும் Job  உண்டாம் job இல்லை
    Java -வை மறந்தவர்க்கு.

3. Bug கண்டுபிடித்தாரை  ஒறுத்தல் அவர் நாண
    Debug செய்து விடல்

4. கற்க கசடற கம்ப்யூட்டர் - ல் கற்றபின்
    சேர்க்க ஷேர் செய்ய.

5. டிவிட்டரினால் டிவிட்டிய செய்தி சிறிதெனினும்
    Trend -ன் மாணப் பெரிது.

Sardharji in a computer class
              Sir         : What is Microsoft Excel?
              Sardarji :  It is a new brand of Surf Excel sir !!??..
              Sir         :   >:-(

Life Before Computer [ BC]

  • Memory was something that you lost with age
  • An application was for an employment
  • A program was a TV show
  • A cursor used profanity. [cursing ]
  • Keyboard was a Piano
  • A web was a spider's home
  • A virus was the flu
  • A CD was a bank account
  • A hard drive was a long trip on the road
  • A mouse pad was where mouse lived.

Top ten Free Learning Websites For Kids [ International Level]

a year of many firsts: Ready Made for Second Grade! Free Websites for kids



Image result for alt ctrl delImage result for alt ctrl del

Image result for computer cartoons

உலக தாய்மொழி தினம்

உலக தாய்மொழி தினம் - 21.02.2015

அம்மா - பிள்ளைக்கு உலகம்.

உலகத்தை பிள்ளைக்கு சொல்லித் தர தாய் பயன்படுத்தியது மொழி, அதன் வழி பிள்ளைகளை பண்படுத்தினாள் .

அத்தகு  தாய்மொழியின் தினத்தைக் கொண்டாடுவது என் தாயையே கொண்டாடுவது போல் ஆகும்.

என் தாய்  மணிவயிரம் தந்த மணிமொழியாம் தமிழ் மொழிக்கும், உலகின் பிற மொழிகளுக்கும், அம்மொழி மாந்தர்களுக்கும் அடியேனின் வாழ்த்துக்கள்.

சனி, 7 பிப்ரவரி, 2015

நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்

மீனாவிற்கு கல்யாணம் !


நான் வாழ வைப்பேன் என்ற அப்பவோ விண்ணில் விண்மீனாய்!

அசலை விட வட்டி (பேரன் பேத்தி) தான் சுவாரசியமானது என்ற அம்மாவோ விடி வெள்ளியாய்!

அன்பை தந்து அரவணைக்க அக்கா அண்ணன் தம்பி இதற்கும் மேல் சொந்தங்கள் பூம்பாதையாய்!

மண்ணில் நல்ல வண்ணம் வாழ மாதவன் வெங்கடேசன் ஆலயத்தில் சுப்ரபாத நேரத்தில் துயில் எழும் இறைவன் துயிலால் தான் பெற்ற ஆற்றலை வாரி வழங்க வாரியாய் !

சுற்றம் சூழ வாழ்வை துவங்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள் !

மதுரையின் இளவலுக்கு, மதுரையின் நாயகியை அண்ணன் கேசவனின் கையால் கண்ணிகா தானம் !

நாள் : 09.02.2015
இடம் : சின்ன திருப்பதி, காருவள்ளி , சேலம்.

அருட்பேராற்றல்  கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்வீர்களாக! வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!




ஞாயிறு, 11 ஜனவரி, 2015

அப்பாவின் ஓர் இருமல்

நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
   மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
    அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
    மனதிற்கு ஓர்  ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
    அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.

சனி, 27 டிசம்பர், 2014

உயிரெழுத்தில் அம்மா - எங்கள் உயிர்



அன்பு

ஆருயிர்

இணைபாலம்

ஈசுவரரூபம்

உன்னதம்

ஊட்டு(க்கு)வித்தவள்

எளிமை

ஏணியானவள்

ஐவரைப் பெற்றவள்

ஒளியானவள்

ஓய்வற்றவள்

ஒளஷதமானவள்







அன்பும் அறனும்

ஆருயிரும் ஆசுவாசுமும்

இனிப்பும் இன்பமும்

ஈரமும் ஈகையும்

உள்ளமும் உவகையும்

ஊழ்தவமும் ஊதியமும் (முற்பிறவி பயன்)

எண்ணமும் எழுச்சியும்

ஏற்றமும் ஏழிசையும்

ஐம்பூதமும், ஐநிலமும்

ஒப்புரவும் ஒழுக்கமும்

ஓதலும் (விருந்து) ஓம்பலும்

ஒளவையும் ஒளஷதமுமானவள்




அன்னமிட்ட அன்னை

ஆசையாய் என்னை

இயல் இசையாய்

ஈன்றபொழுதின் பெரிது

உவக்க உவகையாய்

ஊக்குவித்து முழுமையாய்

என்னை எனக்கறிவித்து

ஏதும் அறிவிக்காமல்

ஐயன் பாதத்தில்

ஒளியாக கார்த்திகையில்

ஓசையின்றி போனாளே!

ஒளவியம் பேசுகிறேன்

அஃதும் அவளில்லாததால்!












ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

ஆசை









சுத்தியாய் நீதி சொல்ல ஆசை

வத்தியாய் வாசம் வீச ஆசை

மத்தாப்பாய் புன்னகைக்க ஆசை

கித்தாப்பாய் நிலைத்திருக்க ஆசை

தத்தம் கொள்கையில் நின்றிருக்க ஆசை

நித்தமிறை நினைவிலிருக்க ஆசை

புத்தனைப் போல் உய்விக்க ஆசை 

யுத்தமில்லாமல் வாழ ஆசை 

சத்தமில்லாமல் சாக ஆசை 

சுத்தமாய் வெளிச்சம் சேர ஆசை

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இன்று ஆசிரியர் தினம்

இன்று ஆசிரியர் தினம் 

குருவே சரணம் !

மாதபிதா குரு தெய்வம்.

யாரெல்லாம் ஆசிரியர்? 

நன்றெது தீதெது என உணர்த்தும் யாரும் ஆசிரியரே!

அப்படியாயின் அனுதினமும் திட்டி திட்டி வைரமாக்கும் அன்னையும் ஆசிரியரே!

அன்பு காட்டி அரவணை த்துச்  செல்லும் ஆசிரியரும் அன்னையே!

பாசம் என்ற பரிசளித்தாகிலும் பண்பாளனாக்கும் தந்தையும் ஆசிரியரே!

தப்பென்ற பட்டபோது தன் நண்பனை வலிந்து கூறி நன்னெறிக்குய்ப்பவனும் 
ஆசிரியரே!

குடிமைப்பண்பினை குற்றவாளிக்கும் வாழ்வால் வாழ்ந்து உணர்த்தும் யாரும்  ஆசிரியரே!

வாழ்வியல் நெறிகளை வளர்விக்கும் எவரும் ஆசிரியரே!

குழந்தையானாலும் ஏதோ ஒரு வகையில் பெரியவர்களுக்கு பாடம்  புகட்டும் மழலைகளும் ஆசிரியரே!

    ஆசிரியர் தினமான இன்று, சமுதாயம் வளர  அ, ஆ முதலாகிய உயிர்களையும், க், ங் முதலாகிய மெய்கயளையும் றௌ நௌ வரை  முடியும் உயிர் மெய்களையும் கற்பித்து  ஃ - ஐ ஆயுதமாக கொண்டு அடுத்தடுத்து ஏணிப்படிகளாய் சிறு வார்த்தை, வாக்கியம் ,  பத்தி, பக்கம், பக்கங்கள் என வளர்வித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்த வயதின்மையால் வணங்குகிறோம்.

என் சுசீலா டீச்சருக்கு என் ஆத்மாவின் வணக்கமும் ஆசி யாசிப்பும் வேண்டுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

வாழ்க ஆசிரியர் குலம்!        வளர்க மாணவர் நலம்!    பெருகுக சமுதாய வளம்!

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சுதந்திர தின வாழ்த்துக்கள்

       சுதந்திர      
தின 
வாழ்த்துக்கள் 
 இனிய இந்தியா,                                                                                                                          
                                               ஒன்றல்ல இரண்டல்ல இருநூறு ஆண்டுகளுக்கு மேல்   கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு இதே போன்ற ஆகஸ்டு 15 வெள்ளிக் கிழமை அன்று இரவில் இஷ்டமான சுதந்தரத்தைப் பெற்றெடுத்தாய்.              
               நீ பெற்றெடுத்த பிள்ளையோ தறுதலைப் படுத்தப் பட்டது, தகப்பனாகிய காந்தியத்துவம் இல்லாத காரணத்தால். உன் பிள்ளையின் பெயரால் மதிக்கப்பட வேண்டியவர்(வை)கள் மிதிக்கப்படுகிறார்கள்.
          பசுமை மிகு இந்தியா பஞ்சம் நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது.  காடுகள் அடுக்ககங்களாக மாறி வருகின்றன.  காட்டின் விலங்குகள் நாட்டின் மக்களை பதம் பார்க்க பல இடங்களில் பயமுறுத்துகிறது.    
                     உன்  குழந்தையைக் காக்க மீண்டும் வேண்டும் நல்ல பல மனித அவதாரங்கள். ஐந்து விரல்கள் வேறானாலும்   கை  ஒன்றாகும். மதங்கள் பலவானாலும் மொழிகள் வேறானாலும், கலாசாரங்கள் பல விதமானாலும் கூட்டுக் குடித்தனத்தில் வேறுபாடுகள் பல மறந்திருந்தாய். பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பினாய் அப்போது. ஆனால் இப்போதோ வேறுபாடுகளை மனதில் கொண்டு குடிக்கும் நீரையும் கூட பகிர மனமற்றிருக்கிறது உன் பிள்ளை. ஒரு  கண் சுண்ணாம்பையும் மறு கண் வெண்ணையையும் பூசிக் கொண்டிருக்கிறது. நட்புப் பாலங்கள் பலப்பட வேண்டிய நிலையில் உன் பிள்ளையின் குடித்தனக்காரர்களின்  ஆற்றுப் பாலங்கள்  விரிசல் கொண்டுள்ளன. பொதுவுடைமை  ஆக வேண்டிய ஆற்று நீரோ தனியுடைமை பெற்றுள்ளது
பணக்கார வேடத்தில் பிச்சையும் பிச்சைக்கார வேடத்தில் சம்பதிப்பதுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.  இவையெல்லாம் நன்னெறியில் கத்தியின்றி ரத்தமின்றி கடந்து நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையுமாக உன் 68 வயது பிள்ளை மாபெரும் சபைகளில் மென்மேலும் மாலைகள் விழ வெற்றி நடை போட்டு வாழ்வாங்கு  வாழ சுதந்திர இந்தியாவிற்கு 68 ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

இப்படிக்கு           
padmaarunac .blogspot .in 


ஞாயிறு, 15 ஜூன், 2014

தந்தைக்கு நன்றி

                    கண்ணில் புலப்படவில்லை எனினும் வாழ்வின் ஒவ்வொரு தருணங்களிலும் தன் முத்திரையை ஏதாவது ஒரு ரூபத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் எங்கள் தந்தை அமரர் மு.அருணாசலம் அவர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.
                   என் பதினொன்றாம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வியில் இருந்து ஆங்கில வழிக் கல்விக்கு மாறிய போது படிக்க சிரமப்பட்ட என்னை ஹாஸ்டலுக்கு வரும் போதெல்லாம் படிப்பித்துக் கொடுத்த தந்தைக்கு நன்றி.
                   என் முதல் வகுப்புப் பள்ளியிலிருந்து மாற்றலாகி வரும் போது என்னைப் பாராட்டி நல்ல பள்ளிகளில் நல்ல நல்ல கல்வியை நான் விரும்பும் படி எல்லாம் படிக்க வையுங்கள் என்று கூறிய பள்ளித் தலைமையாசிரியரின் விருப்பப் படி எனக்கு மேம்பட்ட கல்வி வாய்ப்புகளைத் தந்த தந்தைக்கு நன்றி,
                   மகளென்றாலும் மரியாதையைக் கெடுக்காத, மதிப்பு மிக ஆசிரியையாக என்னை உருக் கொடுத்த  தந்தைக்கு நன்றி,
                   தன்னம்பிக்கை தந்து துன்பக் கடலில் துவண்டாலும் வழி தவறாமல் வாழும் நெறிப்படுத்திய  தந்தைக்கு நன்றி,
                  முதலில் கை பிடித்து நடை பழக்கியும், பின்பு கைவிட்டு நடக்க மேற்பார்வையிட்டு நடை தவ(ள)றும் போது கை தூக்கியும் , என்றும் விடாது கடவுள் போல் கண்ணுக்குப் புலப்படாது கை கொடுத்து வரும் எங்களது ஆருயிர்  தந்தைக்கு நன்றி,
                   வாழும் முறைமையை நேரடியாகவும் , வாழக்கூடாத முறைமையை மறைமுகமாகவும்  படிப்பித்த  எங்களது ஆருயிர்  தந்தைக்கு நன்றி,
                 

நடு இரவில் கண் விழிக்க நேர்கையில்
   மனதில் உருவாகும் ஒரு பயம்
அது சமயம் என்னைத் தேற்றி ஆற்றும்
    அப்பாவின் ஓர் இருமல்
கோபத்தில் அவரின் உருமலும் கூட
    மனதிற்கு ஓர்  ஆறுதல் - ஏதோ
சாபத்தால் காணவில்லை
    அவரின் இருமலும் உறுமலும்
கூடவே எங்கள் ஆறுதலும்.


மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாமல் வாழ்கின்ற  தந்தைக்கு நன்றி,

from

சின்ன வயசுல
அப்பாவோட கைய பிடிச்சிக்கிட்டு
ஒரு துணிக்கடைக்கு போன
ஞாபகம் இருக்கு..

அப்பாகிட்ட
காசு கம்மியாதான்
இருக்கும்னு தெரிஞ்சும்
விலை அதிகமா உள்ள
ரெடிமேட் சட்டைதான்
வேணும்னு
அடம்பிடிச்சி வாங்குனது
இன்னும் என் கண்ணுல நிக்குது..

அந்த தீபாவளிக்கு
அப்பா தனக்குனு
ஒரு வேட்டி கூட எடுத்துக்கல..
இதுவும் நல்லா நெனைப்பிருக்கு..

இன்னைக்கு
அதே துணிக்கடைக்கு
அப்பாவோட போனேன்..

விலை அதிகமா உள்ள
ரெடிமேட் சட்டை
அப்பாவுக்கு
எடுத்துபோட சொன்னேன்..

உடனே அப்பா,
"ஏன்டா அவ்ளோ விலையில..
எனக்கு அதெல்லாம் வேணாம்டா..
உனக்குதான்டா சரிப்பட்டுவரும்..
எனக்கு கம்மி ரேட்லயே வாங்குடா.."

அம்மா மட்டும் தெய்வமில்லை..
அப்பாவுந்தான்..