வெள்ளி, 8 ஜனவரி, 2016

MY DRAWING





my drawing

அம்மா தைத்த ஆடையை அணிந்ததில் இருந்த இன்பம் கோடி ரூபாய் பெருமானமுள்ள ஆடையில் வரவில்லையே! அன்னையை எங்கு தேடுவேன்! இன்பத்தை என்று மீண்டும் காண்பேன்!


புலி  பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இது தானோ!


கலிகாலத்தில் புலி புல்லைத் தின்று விடுமோ, இப்பூவை உண்டு விடுமோ என்று ஐயுறுகிறாளோ இப்பூவை!


ஞாயிறு, 3 ஜனவரி, 2016

தமிழ் இராமாயணம்

தமிழில் இராமாயணம் படிக்க நான் வலைத்தளத்தில் தேடி உலாவியதில் எனக்குக் கிடைத்த pdf. ஆசிரியர் பெரிய மனதுடன் பகிர்ந்திருந்த இதனை மேலும் பலரைச் சென்றடைய விரும்பி அதற்கான இணைப்பை இங்கு இணைக்கிறேன். பலன் பெறுக!

தமிழ் இராமாயணம் 

செவ்வாய், 8 டிசம்பர், 2015

மழை வரத்தை சாபமாக்கியது யார் குற்றம்?

mazhaiyin saatchi

வீடியோ உபயம்  - தமிழ் வானம் 

வாரித் தந்த வள்ளல் 
மாரித் தாயின் மகவு 
ஊரைக் காக்க ஊற்றும் 
ஏரித் தண்ணீராய் ஏற்றம் 
பெற்ற நீரைப் 
பேணிக் காப்போம்!

நீர் வளம் காக்க இயலாத பலருள் நானும் ஒருவள் முத்தாரம் 

செவ்வாய், 10 நவம்பர், 2015

தங்கைக்கு தலை தீபாவளி - வாழ்த்துக்கள்

                                தாய் தந்தை இல்லாமல் அண்ணனின் முயற்சியில் புக்ககம் சென்றாள் தங்கை. அவளின் தலை தீபாவளி - ஆனால் அன்னை இறந்த வருடாந்திரம் முடியாத காரணத்தினால் முறையான தீபாவளி இல்லை என்றாலும் கடவுளுக்கு படையல் என்ற ஒன்று இல்லாமல் சாதாரணமாக சிறு விருந்து செய்தோம். மனது நிறைய மண்ணில் அடங்கிய பெற்றோர் நிறைந்திருக்க, கடவுளை வணங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா அம்மா நன்றிகளால் நிறைகிறது எங்கள் மனது. உங்கள் ஆசியை தினம் தினம் யாசிக்கிறேன். மனம் நிறைய உங்களை பூஜிக்கிறேன். வாழ்வின் வளம் பொங்க தவிக்கிறேன். நானும் பிறந்தேன் என்றில்லாமல் என் பிறப்பு சரித்திரமாக மாற நான் தகுதியானவளாக, சரித்திரமாக்க பத்மா அருணாசலம் அருள வேண்டும்.

புதன், 15 ஜூலை, 2015

கர்மவீரர் காமராஜர் மண்ணில் உதித்த தினம் இன்று!

தாத்தாக் கைப் பிடித்து வாக்கிங் போகவும், போகும் வழியில் அவர் அனுபவங்களைக் கேட்கவும், அவருக்குச்  சலிப்பு வந்தாலும் சளைக்காமல் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலடையவும், பாட்டியின் அணைப்பில் பல கதைகள் கேட்டு வாழ்வின் நிதர்சனத்தை உணரவும் கொடுப்பினை வேண்டும். அக்கொடுப்பினை ஏனோ எனக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் வாய்க்கவில்லை. அதனால் அம்மாவிடம் தாத்தா பற்றிக் கேட்கும் போதெல்லாம் அவள் சொல்வதுண்டு, "எங்க அப்பா ரொம்ப  ரொம்ப ரொம்ப ... நல்லவர். நம்ம காமராஜர் மாதிரி", என்று. அதனால் தானோ என்னவோ எனக்குக் காமராஜர் மீது மிகப் பெரிய ஈர்ப்பு. "கிராமத்தில் தற்போது எங்கள் பெயரில் இருக்கும் வீடு காமராஜர் அருளியது. ஒரு சமயம் எங்கள் ஊர் தீ விபத்துக்கு (1950 -60) உள்ளான போது வசித்த வீடுகள் எல்லாம் விபத்தில் நாசமாகியது. அது சமயம் புணர் வாழ்விற்காக எம் ஊர் மக்களுக்கு வீடு கட்டி அவ்வீ டுகளுக்கு மக்களை உரிமை தாரர்கள் ஆக்கினார்  காமராஜர்", என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். விளம்பரம் எதுவும் தேடிக்காத வியத்தகு மனிதர். நல்லவராகவே வாழ நாம் விரும்பினாலும் மாய உலகம் நம்மில் பல சபலங்களை உற்பத்தி செய்து விடுகிறது. அவற்றை எல்லாம் கடந்து நல்லவராய் பிறரை வாழ்விப்பதில் வல்லவராய், சபலங்களுக்கு ஆட்படாமல் வாழ்ந்ததாலேயே  அவர் கர்ம வீரர்! அவருக்கு என் கவிதாஞ்சலி! 
உன் பெயரோ காமராஜ் !
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும்  நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்  
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய்  !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!





புதன், 1 ஜூலை, 2015

தலை கவசம் உயிர் கவசம்

இன்று ஜூலை 1 முதல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாயத் தலை கவசம் அணிதல் சட்ட முறை அமுலுக்கு வந்தது. இன்று காவல் துறை அலுவலர்கள் கூட தலைக் கவசம் அணிந்து சென்றது மக்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. 

ஞாயிறு, 21 ஜூன், 2015

Happy International yoga day

                                                        ஜூன் 21 சூரிய வெளிச்சம் அதிகம் வெளிப்படும் நாள். இந்தியரின் யோகக் கலைக்கு உலகளாவிய அங்கீகாரமே உலக யோகா தினம். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம். யோகக் கலையை அனுதினம் மேற்கொள்வோம்.


happy fathers day

அருகிலில்லை அப்பா!
ஆதரவாய் அவர் ஆன்மா!
இவர் போல் இவ்வுலகில்
ஈதல் இசைபட வாழ்ந்தவர் எவர்?
உறவின் உன்னதம்


வெள்ளி, 12 ஜூன், 2015

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின நாள் - கொண்டாடுவதற்கு அல்ல வழக்கத்திற்கு கொண்டு வர!

கல்வி எமது முதல் உரிமை! - அதை 
களவாடுதல் தகுமோ?

கனிவாய் எமது வாழ்வாதாரம் 
கனிந்திட உதவிடுவீர்! 

குழந்தைத் தொழிலுடைமை - நம் 
குடிமையியலுக்கு சாபக்கேடு!

பரிகாரம் என்ற ஒன்றுண்டேல் - அது 
பள்ளிப் படிப்பு ஒன்றேயாம்!

ஒன்றுபடுவீர்! குழந்தைத் 
தொழிலாளர் முறை ஒழிப்பீர்! 

குழந்தைத் தொழிலாளர் இல்லாத இந்தியா வளமான இந்தியா! - 
அதனால் வல்லரசாகும் இந்தியா!

இந்த   எதிர்ப்பு    தின      நாள்
கொண்டா டுவதற்கு   அல்ல
வழக்கத்திற்கு கொண்டு வர!

ஜெய் ஹிந்த்! ! !

                 ஒரு குழந்தைத் தொழிலாளியின் மனக்குமுறல்!

புதன், 10 ஜூன், 2015

அம்மா வந்தாச்சு !

        சங்கீதாவிற்கு இன்று ஒரே அம்மா ஞாபகம்? நாளைக்கு அன்னையர் தினம். அம்மா கூட இருந்தால் நன்றாயிருக்கும்? நடக்குமா? நடக்குமென்றால் எப்படி? தெரியவில்லை.
       போன  வருடம் அம்மா கூட இருந்தது நினைவில் வந்து போனது. அம்மா அப்பிராணி போலத் தெரிவாள். ஆனால் அப்பிராணி   அல்லள். பேதை போலத் தெரிவாள் ஆனால் அவள் ஒரு  மேதை. அவள் சொல்லித்தந்த கதைகள் மனசுக்குள் காவியங்களாய் கல்லெழுத்துக்களாய் அழகிய ஓவியங்களாய் என்றுமே மறையாதவை. அவள் பாடிய பாடல்களை பி.சுசீலா வந்து பாடினாலும் மனது ஏற்காது. அம்மா வருவாளா? என் நைந்து போன உள்ளம் தைத்து வைக்க அவள் வருவாளா? அடிகொருதரம் கண்கள் ஏனோ அம்மாவைத் தேடியது. அம்மா வரணும் மனது வேண்டியது. அதற்காக வேலை செய்யாமலா இருக்க முடியும்?
         சிங்கில் அழுக்கு பாத்திரங்கள் காத்திருந்தது. அவற்றை ஆதரிக்கும் வண்ணம் விளக்கி அலசிக் வைத்தாள். "கண்ணு பாத்தா கை செய்யணும்" - அம்மா அடிக்கடி சொல்லும் வசனம். அது எவ்வளவு சரியான ஒன்று என்பதை சமீப காலமாக அதை உண்மை என்பதை சங்கீதா உணர்கிறாள். சின்னச் சின்னதாக பாத்திரங்கள் விழும் போதே செய்யணும் என நினைக்கிறாள். ஆனால் அதிகமாக பாத்திரம் சேர்ந்த பிறகே மிகவும் கஷ்டப் பட்டு செய்கிறாள். எடுக்கிற பொருள் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். சரியான படி இல்லாததை பார்க்க நேர்ந்தால் உடனே அதை சரியாக வைக்க வேண்டும். இப்படி அம்மாவோட வழி நடத்துதல்கள் எராளம். அம்மா வரணுமே என மனது மிக ஏங்கியது.
    தூங்கும் போது கூட ஆடை விலகாமல் ஒருக்களித்து அழகாகத் தூங்க வேண்டும். தூங்கினாலும் பெண்ணுக்குள் ஒரு விழிப்பு உணர்வு இருக்க வேண்டும்.  "அது அவளை இராவணன் கோட்டையிலும் சீதையாக்கும்" -என்பது அம்மா அபிப்ராயம். அப்படித்தான் அம்மா வளர்த்தாள். அப்படி வளர்ந்த காலத்தில் அம்மா மேல் கோபம் கோபமாக வரும். அனால் இன்று அந்த வளர்ப்பு பலராலும் பாராட்டப் படுகிறது. அம்மா சிம்ப்ளி கிரேட் .
                 வேலையெல்லாம் முடிந்தது.  கணினியில் பேஸ்புக் பக்கங்களை பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைய அன்னையர் தின வாழ்த்துக்களை பலர் அள்ளி விட்டிருந்தார்கள். அம்மா எப்போம்மா வருவே? மனம் முழு வீச்சில் ஏங்கியது.
                "சங்கீதா. . .  சங்கீதா. . .  " வாசலில் அம்மாவின் குரல் போல் கேட்டது. மனது "இது எப்படி சாத்தியம்?  பிரமையோ"எனக் கூறிக் கொண்டது.   "சங்கீதா. . .  சங்கீதா. . .  " மீண்டும் அதே குரல், ஆனால் கொஞ்சம் ஆண்மை கலந்திருந்தது. சந்தேகத்துடன் வாசல் சென்று கதவைத் திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி. வந்திருந்ததோ  இரத்தினம் மாமா. சங்கீதாவிற்கு தாய் மாமா. அம்மாவின் அண்ணா.
        அவளுக்கோ மகிழ்ச்சி. போன மாதம் மீளாத் துயரில் எங்களை ஆழ்த்தி விட்டுச் சென்ற அம்மா இன்று எப்படி வர இயலும்? ஆனால் அவள் வந்து விட்டாள், பத்மா அம்மாவாக இல்லை, சங்கீதாவின் அம்மானாக. கடவுள் எவ்வளவு கிரேட். "தாய் மாமன் தாய்க்கு சமம்" - அம்மாவின் ஒலிகள் காதில் ஒலித்தது. "மாமாவைப் பாரு! நானும் தெரிவேன்", என அம்மா பாடுவது போல் இருந்தது. அம்மா(ன்) வந்தாச்சு. அன்னையர் தினம் கொண்டாட. அம்மா(ன்)வை கவனிக்க, விருந்து படைக்க சங்கீதா ரெடியானாள்.

க(ன்)னியும் மாங்கனியும்

ஜூன் மாதம் பத்து நாட்கள் சென்று விட்டன. கிட்டத்தட்ட மாம்பழ சீசன் முடியப் போகிறது. இன்னும் முழுதாக ஒரு பழம் கூட இனிதாக சாப்பிட முடியவில்லை. இன்று இரயிலில் கோடம்பாக்கம் கடந்து வந்த போது ஒரு வீட்டில் மரத்திலேயே பழுத்து தொங்கிய பழத்தைப் பார்த்த போது மனது அந்த எட்டாக் கனியைப் பறித்து உண்ண துடித்தது. இனி வரும் காலத்தில் ஒவ்வொருவரும் தானே மரம் வளர்த்து அம்மரத்தில் விளையும் கனியை பறித்து உண்பதுவே நம்பகமானதாகும். அது இயலாத பட்சத்தில் கார்பைடு கல்லை மனதில் இருந்து தூக்கி விட்டு ரிஸ்க் எட்த்து சாப்பிட்டால் மட்டுமே மாங்கனியை உண்ணலாம். இப்படி இருந்த என் மன ஓட்டத்தில் மாங்கனியும் கன்னியும் ஒரு விதத்தில் ஒன்று தான் எனப் பட்டது.

தானே கனிய வேண்டிய கனியை கார்பைடால்  கனிவிக்கிறார்கள். தானே காதல் கனியாததால் அமிலம் வீசி முகத்தை கன்றிப் போக வைக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், க(ன்)னியும் மாங்கனியும்  ஒன்றுதானே!

சனி, 30 மே, 2015

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று
புகையிலையால் மனித உடல் நலனுக்கு ஏற்படும் தீங்கினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் 1987-ஆம் ஆண்டு மே மாதம் 31-நாளில் புகையிலை எதிர்ப்பு நாளாக அறிவித்தது.
புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது மனிதனின் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிப்படையச் செய்கிறது. வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்று நோய், காசநோய், விடாத இருமல், மூச்சுத்திணறல், இருதய நோய், ஆஸ்துமா, சிறுநீரகக் கொளாறு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை ஏற்படுத்தி மனிதனின் ஆயுட் காலத்தை குறைக்கிறது. புகையிலைப் பொருட்களில் 40-க்கும் மேற்பட்ட நிக்கோடின், ஹைட்ரஜன் சயனைட், ஆர்சனிக், கார்பன் மோனோ ஆக்ஸைடு, ஃபார்மால்டிஹைடு போன்ற கொடிய நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வேகமாக முதுமைப் பருவத்தை தோற்றுவிக்கிறது.
புகையிலைப் பொருட்களை கைவிட மனநல மருத்துவரை அணுகலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான இசை, புதிய மொழி, தியானம், ஓவியம் வரைதல், யோகாசனம் போன்றவற்றில் கவனத்தை செலுத்தலாம். தன்னுடைய குடும்ப நலனை மனதில் நிறுத்தி புகையிலை அடிமைத் தனத்திலிருந்து விடுபட இந்நாளில் உறுதி செய்வொம்.
YENI - ஏணி's photo.
நன்றி  - Yeni  - ஏணி 


திங்கள், 25 மே, 2015

உலக தைராய்டு தினம்


YENI - ஏணி's photo.இன்றைய வரலாறு
உலக தைராய்டு தினம் இன்று
மனிதனின் கழுத்துப்பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பி, நாளமிள்ளா சுரப்பிகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.  சுரப்பியாகும். உடல் சோர்வு, மறதி, உடல் எடை குறைதல் அல்லது கூடுதல், தசைகள் பலம் குறைதல், தூக்கமின்மை படபடப்பு, எரிச்சல் போன்றவை தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டுள்ளதன் அறிகுறியாகும். உடலில் அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் இந்நோய் ஏற்படுகிறது. தைராய்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தைராய்டு சர்வதேச கூட்டமைப்பு 2007-ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் மே-25-ஆம் நாளினை உலக தைராய்டு தினமாக அறிவித்து அனுசரித்து வருகிறது.

ஞாயிறு, 24 மே, 2015

இன்றைய வரலாறு - May 24

இன்றைய வரலாறு
காசநோய்க்கு காரணமான பாக்டீரியா(Bacillus) அறிவிக்கப்பட்ட தினம் இன்று ராபர்ட் ஹென்ரிச் ஹென்மென் கோச் ஜெர்மனியின் ஹானோவரில் உள்ள கிளாஸ்தல் எனும் இடத்தில் 1843-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ல் பிறந்தார். உயிரியல் வல்லுரான ராபர்ட் கோச் 1882-ல் காசநோய்க்கு காரணமான தொற்றுநோய் நுண்ணுயிர் பாக்டீரியாக்களை அவரின் புதிய தொழில்நுட்ப உதவியடன் கண்டறிந்து தனிமைப்படுத்தினார். மேலும் காலரா, ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்களுக்கான தொற்றுக் காரணிகளையும் கண்டுபிடித்தார். இதன் காரணமாக ராபர்ட் கோச் நவீன நுண்ணுயிரியல் ஆய்வின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். மருத்துவ நுண்ணுயிரியலில் ராபர்ட் கோச் உருவாக்கியுள்ள நான்கு நிலையான கொள்கைகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 1905-ஆம் ஆண்டு காசநோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிந்ததற்காக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நன்றி :- YENI - ஏணி

வெள்ளி, 22 மே, 2015

சர்வதேச பல்லுயிர் தினம்


                  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலகின் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து சர்வதேச பல்லுயிர் தினத்தை இன்றைய நாளில்(மே-22) கொண்டாடி வருகிறது. கடந்த நூற்றாண்டில் அனைத்து துறைகளிலிலும் ஏற்பட்ட அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் நில மற்றும் நீர் வாழ் உயிரினங்கள், காட்டில் வாழும் பல் வகை உயிரினங்கள் என உலகின் அனைத்து உயிர் வாழ்விகளுக்கும் அச்சுறுத்தலாகவும், பல இனங்கள் அழியும் நிலையிலும் உள்ளன. தொழிற்சாலை மாசு மற்றும் கழிவுகள், மறுசுழற்சி செய்ய இயலாத எலக்ட்ரானிக் குப்பைகள், மட்காத பாலித்தின் பைகள், செயற்கை சாயக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள் என்று உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் புவி வெப்ப மண்டல வாயுவின் சராசரி வெப்ப அளவு விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் புவியின் துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் 100 வருடங்களில் புவியின் சில பகுதிகள் கடலில் மூழ்கி பல உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது, கடலில் சேரும் கழிவுகளினால் கடல் வாழ் உயிரினங்கள் சிலவும் மறைந்து வருகின்றன. ஆகையால் சர்வதேச பல்லுயிர் தினமான இன்று நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியேற்போம்.

நன்றி :-     
YENI - ஏணி