செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஏதோ ஒரு பாடல் என் காதில் கேட்கும் அதைக் கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்.

எவ்வளவு உண்மையான வரிகள்!.
சில பாடல்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - இவ்வரிகளைக் கேட்கும் தோறும் ஞாயிறு நாட்களில் எங்கள் சிறு பிராயத்தில் எங்கள் பெற்றோரோடு நேரம் செலவிட்ட நாட்களில் பொழுதுபோக்காக அப்பா தன்னை ஒரு பாடகன் போல அசைவுகள் தந்த வண்ணம் பாடியதுண்டு. இதன் மூலம் அப்பா, "நல்ல பிள்ளைகளாக வளர்ப்பது எங்கள் கடமை அதனை பின்பற்றுவது உங்கள் கடமை",  என எங்களுக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

தூங்கப் போகையில் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டி வைத்தேன் " - பாடியிருக்கிறார்.

பாலும் பழமும் கைகளில் ஏந்தி மெட்டில் வேலும் மயிலும் கைகளில் ஏந்தி என முருகன் பாடலை அம்மா ரொம்ப அழகாக பாடுவார்கள். 

அம்மாவும் அப்பாவும் அப்படி ஒரு understanding . சண்டைகள் பல இருந்திருந்தாலும் பிரிவு அவர்களுக்குள் இல்லவே இல்லை. 

மயக்கமா கலக்கமா பாடலை எத்தனை  தடவை பாடி இருப்போம். 

அப்பாவிற்கு சிவாஜி நடிப்பு மிகப் பிடிக்கும். இருந்தாலும் எம்.ஜி.ஆர் படங்களையே பார்க்க விரும்புவார். கேட்டால் எம்.ஜி.ஆர். படங்களின் முடிவு சுபமாக இருக்கும். ஆனால் சிவாஜி நடிப்பிற்கு முக்கியத்துவம் தந்து எதிர்மறை முடிவுகளோடு படம் முடியும் என்பார்.

முதல் மரியாதை படத்தின் பாடல்கள் எங்களுக்கு குடும்பப் பாடலாகவே மாறிய கதை ஒரு சுவாரசிய நிகழ்வு ஆகும். அந்தப் படம் release ஆன சமயம் தான் என் சின்ன தம்பி பிறந்தான். அவனோ தொட்டிலில் தாலாட்டும் போது நீதானா அந்தக் குயில் எனப் பாடினால் அகா முக மலர்ந்து சிரிப்பான். எப்போது அப்படப் பாடலைக் கேட்கும் போதும் மனம் முழுதும் அப்பாவே நிறைவார்.

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான் வரிகளைக் கூறும் போது அறிவியலை அதிகம் பேசுவார்.

ஒளிமயமான எதிர்காலம் என் கண்களில் தெரிகிறது எனப் பாடும் தோறும் தன் கனவை வெளிப்படுத்துவார். 

இவற்றையெல்லாம் விடுங்கள். முத்துக்கு முத்தாக என் சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து  வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக பாடலை கேட்டாலே அவருக்கு ஒட்டிக் கொள்ளும் பரவசம் கொஞ்ச நஞ்சமல்ல. அவர் தந்தை மற்றும் சித்தப்பாக்களை நினைந்து பர பரப்பாக பல விஷயங்கள் பேசுவார். குடும்ப உறவுகளில், சொந்த பந்தம் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அதீதம். 

அண்ணாமலை SERIAL  தலைப்புப் பாடல் "உலகம் இருப்பது பாசத்துக்காக " பாடலை குலுங்கி குலுங்கி உருகிக் கேட்பார். 

எப்படியோ அப்பா உருவமாக உலகில் இல்லை என்றாலும் கேட்கின்ற பாடல்களில், படிக்கின்ற விஷயங்களில், பார்க்கின்ற காட்சிகளில்  தத்ரூபமாக வாழ்கிறார். அப்பா இருந்தால் அங்கு அம்மா இல்லாமலா? 

சிங்கம் என்றால்  என் தந்தைதான் - இப்படித்தான் ஒவ்வொருவரும் நினைக்கிறார். நானும் அப்படித்தான் 

FROM  NA. MUTHUKUMAR SIR I DEDICATE THE SONG THEIVANGAL ELLAM THOTRE POGUM SONG TO MY FATHER

நான் இன்று ஆசிரியையாக இருப்பதற்கு மாணவர்களே காரணம். எப்படி?


காரணங்கள் இதோ.


அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது தரும் போதை அளப்பரியது. சிலர் மதிப்பது போல் நடித்திருக்கலாம். ஆனால் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் மாணவர்களே காரணம். 


சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் என்னை மேலும் படிக்கத் தூண்டுகிறார்கள்.  சிலர் எனக்குத் தெரிகிறதா என் அறிய கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களையும் திருப்திப்படுத்த நான் மிகையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. 
 அடாவடியாக நடப்பதன்  மூலம் இப்படியும் ஆட்கள் உள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள். எனவே இது போன்ற ஆட்களை எப்படி ப[ண்]யன்படுத்துவது என என் மூளையை துருப்  பிடிக்கா வண்ணம் பயன்படுத்துகிறேன். 


சில மாணவர்கள் ஒரு தடவை சொன்னாலே புரிந்து கொள்வர். சிலருக்கு சில தடவை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். பலருக்கு பல தடவை கூற வேண்டியிருக்கும். இதன் மூலம் பொறுமையை எனக்கு கற்பித்திருக்கிறார்கள்.



பல நேரங்களில் தவறுகளுக்காகக் கடிந்திருப்போம். அவற்றை மறந்து மன்னிக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் தவறு செய்யாமல் கூட திட்டு வாங்கியிருப்பார்கள். ஆனாலும் மன்னிப்பார்கள். [வேறு வழி இல்லை ]

மிக மிக மிக முக்கியமாக நான் படித்த syllabus மிகப் பழையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய மாணவர்களின் அறிவுத் திறனுக்கு தீனி போட வேண்டி புது syllabus படி பாடம் நடத்த தூண்டுகோலாய் இருக்கிறார்கள் 


எனவே மாணவர்களே என்னையும் ஆசிரியையாக அங்கீகரித்த உங்கள் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

வாழ்க  நீவிர்! எனவே வளர்வோம் நாங்கள்!




நான் இன்று ஆசிரியையாக இருப்பதற்கு மாணவர்களே காரணம். எப்படி?


காரணங்கள் இதோ.


அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது தரும் போதை அளப்பரியது. சிலர் மதிப்பது போல் நடித்திருக்கலாம். ஆனால் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் மாணவர்களே காரணம். 


சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் என்னை மேலும் படிக்கத் தூண்டுகிறார்கள்.  சிலர் எனக்குத் தெரிகிறதா என் அறிய கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களையும் திருப்திப்படுத்த நான் மிகையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. 
 அடாவடியாக நடப்பதன்  மூலம் இப்படியும் ஆட்கள் உள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள். எனவே இது போன்ற ஆட்களை எப்படி ப[ண்]யன்படுத்துவது என என் மூளையை துருப்  பிடிக்கா வண்ணம் பயன்படுத்துகிறேன். 


சில மாணவர்கள் ஒரு தடவை சொன்னாலே புரிந்து கொள்வர். சிலருக்கு சில தடவை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். பலருக்கு பல தடவை கூற வேண்டியிருக்கும். இதன் மூலம் பொறுமையை எனக்கு கற்பித்திருக்கிறார்கள்.



பல நேரங்களில் தவறுகளுக்காகக் கடிந்திருப்போம். அவற்றை மறந்து மன்னிக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் தவறு செய்யாமல் கூட திட்டு வாங்கியிருப்பார்கள். ஆனாலும் மன்னிப்பார்கள். [வேறு வழி இல்லை ]

மிக மிக மிக முக்கியமாக நான் படித்த syllabus மிகப் பழையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய மாணவர்களின் அறிவுத் திறனுக்கு தீனி போட வேண்டி புது syllabus படி பாடம் நடத்த தூண்டுகோலாய் இருக்கிறார்கள் 


எனவே மாணவர்களே என்னையும் ஆசிரியையாக அங்கீகரித்த உங்கள் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

வாழ்க  நீவிர்! எனவே வளர்வோம் நாங்கள்!




திங்கள், 22 ஆகஸ்ட், 2016

வாலு பசங்க!

22.08.2016   XII  A
ஒவ்வொரு நாளும் என் வகுப்பில் நான் பெரும் அனுபவங்கள் எனக்கு நல்ல நல்ல படிப்பினைகளைத் தருகிறது. ஒரு ஆசிரியராக இல்லாமல் ஒரு சக மனுஷியாக அவர்களை நோக்கினால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் விளையாட்டும் அதனைத் தொடர்ந்த குஷியும் நமக்கும் ஒட்டிக் கொள்ளும்[ ஆசிரியையாக நோக்கினால் கொல்லும்]. அப்பப்பா என்னே ஒரு சமய சந்தர்ப்ப விமர்சனங்கள். இவை எல்லாம் திறமை என எண்ணினால் ஏன் அவர்களால் படிக்க இயலாது.

ஆனால் இன்று ஏனோ மாணவர்கள் கவனம் பாடத்தில் இல்லவே இல்லை. இஃது என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. எனக்குள் தாழ்வு மனப்பான்மையை அதிகரிக்கவே செய்தது    ஒருவேளை என் கற்பித்தல் திறன் சரியில்லையோ என எண்ணத் தோன்றியது. இறைவா என் மாணவர்களின் இயல்பை சரியாகப் படித்து படிப்பினை படிப்பிக்க எனக்கு வரம் பல தர வேண்டும். என் மாணவச் செல்வங்களின் நல்வாழ்வில் எனது பங்கும் இருக்கப் பிரயாசைப்படுகிறேன். இறைவா அருள்வாய்!



ஓம்  நமச்சிவாய!





சனி, 20 ஆகஸ்ட், 2016

மனத்தைத் தொட்ட வாசகம்

இன்று OLA  ஆட்டோ ஒன்றின் பின்புறம் நான் கண்ட வாசகம்

வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..

என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.


மனத்தைத் தொட்ட வாசகம்

இன்று OLA  ஆட்டோ ஒன்றின் பின்புறம் நான் கண்ட வாசகம்

வறுமை வந்தால் வாடாதே!
வசதி வந்தால் ஆடாதே!
எத்துணை பொருத்தமான வாசகம். வாழ்க்கை பரிச்சையில் நாம் காணும் தேர்ச்சி வசதி அல்லது வறுமை ஆகும். எது வந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த நாம் கற்க வேண்டும். பரிட்சைக்குப் பின்பு படிப்பது வாழ்க்கையில் மட்டும் தான்..

என் தந்தை அடிக்கடி கூறும் வாசகம் மண்ணைத் தின்றாலும் மறைத்துத் திண். இதன் அர்த்தம் பிறருக்குப் பகிரக் கூடாது என்பதல்ல! நான் மண் சாப்பிடும் அளவு நிலை தாழ்ந்து உள்ளேன் எனப் பிறருக்குத் தெரிவிக்கக் கூடாது என்பதாகும். வறுமையில் செம்மை என்பதாகும். அதையே இவ்வாசகங்களும் உணர்த்துவதாக உணர்கிறேன்.


செவ்வாய், 12 ஜூலை, 2016

Praying birth day blessings

தந்தையும் தாயும் என்னை ஆசீர்வதிக்க வேண்டும் இன்றைய தேதியில் அன்றொரு நாள் என்னை ஈன்று புறந்தந்தனர்.


புதன், 8 ஜூன், 2016

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

mathapitha: நினைவலைகள்

mathapitha: நினைவலைகள்:                                                  இப்போதெல்லாம் எந்த இழப்பும் பேரிழப்பாகத் தெரிவதில்லை தந்தை, தாய் எனும் பெரும் பொக்கிஷத்தை...

திங்கள், 7 மார்ச், 2016

ஒரு ராத்திரி - நல் சிவராத்திரி வாழ்த்துக்கள்

வேண்டத்தக்கது அறிவோய் நீ! எம் இறைவா! ஈசா! மகேசா! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

எதிர் வீட்டு வாசல் சுவற்றில் லிங்கம் எண்ணையால் வரைந்திருந்ததைப் பார்த்த எனக்குள் ஆச்சரியங்கள் பல பூத்தது.ஏனெனில் அவர்கள் ஒரு கிறித்துவ குடும்பத்தினர். இது எப்படி சாத்தியம்? ? ? ?

மனது குடைந்ததில் சில நொடிகளிலேயே விடை கண்டேன். ஆம் அவர்கள் வரைந்தது என்னவோ சிலுவைதான்! ஆனால் அத்தோற்றம் ஊறி லிங்கமாகக் காட்சி அளித்ததில் எல்லாம் சிவம் என புளகாங்கிதம் அடைந்தேன். அவ்வெண்ணம் மேலும் பரிணமித்து இஸ்லாமின் சின்னம் பிறை வடிவையும் நம் ஐயன் தலையில் சூடி உள்ளதை மனது நினைந்த மாத்திரத்தில் அன்பே சிவம் ! அது எந்த மதமாயினும்! எனக் கண்டு கொண்டேன்! இதைத்தான் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி! சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி என விநாயகர் அகவலும் கூறுகிறதோ!


                      திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.



நன்றி :- know-your-mantras.blogspot.in


சனி, 13 பிப்ரவரி, 2016

இயற்கை நமது வரப்ரசாதம்

காடுகளைக் காப்போம் காடுகளை வளர்ப்போம் காடெங்கும் இருந்தால் தான் நாடு செழிக்கும்.

இயற்கை நமது வரப்ரசாதம் அதை வறட்சிப் பிரதேசம் ஆக்கி விட்டால் நம் நிலைதான் என்ன?

Let Nature be our teacher

வெள்ளி, 15 ஜனவரி, 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

அன்று பெய்த மழையில் அரும்பாடுபட்டு 
ஆடிப் பட்டம் தேடி விதைத்து 
இனிய பொங்கலன்று விளைச்சலை இன்பத்தோடு 
ஈன்றெடுத்த பிள்ளைகளுடன் ஈசன் அருள் நாடி 
உறவுகள் கூடி உள்ளபடி உழவனை, 
ஊனையும் உயிரையும் காக்கும் இயற்கையை 
எண்ணத்தால் கோல வண்ணத்தால் வணங்க 
ஏலக்காய் மணத்துடன் பச்சரிசிப் பால் பொங்கி 
ஐயன் அருணனுக்கும் வருணனுக்கும் நன்றி பாராட்ட 
ஒரு முத்தான வாய்ப்பு ! கொண்டாடுவோம்
ஓங்கி வளர்ந்த கரும்பு, மஞ்சளோடு !
அஃதே எமது விருப்பும் வாழ்த்தும்!
உழவில்லாமல் உணவில்லை! உணவில்லாமல் உயிரில்லை!
உழவால் உயர்! உழவே உயிர்!
உயிரைக் காப்போம் பாரம்பரியத்துடன்!
உழவை வணங்குவோம்! உழவனுக்குத் தோள் கொடுப்போம்!
உழவர் தினத்தில் என்றும் இன்பம் தங்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !




வெள்ளி, 8 ஜனவரி, 2016

MY DRAWING





my drawing

அம்மா தைத்த ஆடையை அணிந்ததில் இருந்த இன்பம் கோடி ரூபாய் பெருமானமுள்ள ஆடையில் வரவில்லையே! அன்னையை எங்கு தேடுவேன்! இன்பத்தை என்று மீண்டும் காண்பேன்!


புலி  பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது இது தானோ!


கலிகாலத்தில் புலி புல்லைத் தின்று விடுமோ, இப்பூவை உண்டு விடுமோ என்று ஐயுறுகிறாளோ இப்பூவை!


ஞாயிறு, 3 ஜனவரி, 2016

தமிழ் இராமாயணம்

தமிழில் இராமாயணம் படிக்க நான் வலைத்தளத்தில் தேடி உலாவியதில் எனக்குக் கிடைத்த pdf. ஆசிரியர் பெரிய மனதுடன் பகிர்ந்திருந்த இதனை மேலும் பலரைச் சென்றடைய விரும்பி அதற்கான இணைப்பை இங்கு இணைக்கிறேன். பலன் பெறுக!

தமிழ் இராமாயணம்