அமரரான அப்பாவிற்கு ….
அமரரான அப்பாவிற்கு ….
அருகிலிருந்தபோது உமது 
      அருமை உணராமல்
ஆறாத் துயரின் போது 
     எங்கெங்கோ தேடி அலைகின்றோம் ? !. 
இருளாய்த் தெரியுது வாழ்க்கை, 
     எங்கே அதைத் தொலைத்தோம்?
ஈகை பல செய்தாலும் 
     எப்பொழுது நீர் வருவீர்? 
உள்ளம் முழுதும் உருகினாலும் 
     என்ன  செய்ய இயலும்? 
ஊரே உம்மை வழியனுப்பியது, 
     இருந்தும் திரும்பி வர மாட்டீரோ? 
என்னால் நீரின்றி 
     என்ன சாதிக்க இயலும்? 
ஏதேதோ எண்ணி அழுகின்றேன்
      ஏன்  இந்த துன்பம்?
ஐயங்கள் நீக்கி படிப்பித்தீர் 
     யார் இனி எனது ஆசான்? 
ஒருவரும் நிரப்பார் உம்முடைய இடம்
      யாரேனும் வரக் கூடுமோ? 
ஓசையின்றி ஊர்கோலம் சென்றீரே! 
     எப்பொழுது உம்மைக் காண்பேன்? 
ஒளஷதம் இல்லையோ மரண வியாதிக்கு 
            இருந்தால்  அது 
எங்கே? 
 அஃதைப் பெற்றுக் காட்டில்
       உறங்கிடும் தந்தைக்குத் தருவேனே. 
 முத்தாரம்  அருணாசலம், 
சூளைமேடு-சென்னை 94.
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக