அன்னை பூமி
அன்னம் தரும் சாமி !
அவள் தந்த மரம்
அது நமக்கு என்றும் வரம்!
அந்நிய முறையாம்
இரசாயன முறைப் பயிர்
இனிக் குடிக்கும் நம் உயிர்!
இயற்கை முறை பயிர்ப்பு
அன்னைபூமிக்கு தரும் உயிர்ப்பு!
அன்னையர் கை விடப்பட்டால்
அவர்களுக்கு இல்லம் உண்டு !
அன்னை பூமி கைவிடப்பட்டால்
இல்லம் இல்லை நாம் வாழ!
எனவே உலகுக்காக இல்லை -
எனினும் நமக்காக காப்போம்!
எவ்வாறு?
அறம் செய்வோம் - மரம் வளர்த்து!
இறைவன் அருட்கொடைகளை
இனியாவது காப்போம்!
அதை எந்த நாளும் மறவாது செய்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக