ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

ஆசை









சுத்தியாய் நீதி சொல்ல ஆசை

வத்தியாய் வாசம் வீச ஆசை

மத்தாப்பாய் புன்னகைக்க ஆசை

கித்தாப்பாய் நிலைத்திருக்க ஆசை

தத்தம் கொள்கையில் நின்றிருக்க ஆசை

நித்தமிறை நினைவிலிருக்க ஆசை

புத்தனைப் போல் உய்விக்க ஆசை 

யுத்தமில்லாமல் வாழ ஆசை 

சத்தமில்லாமல் சாக ஆசை 

சுத்தமாய் வெளிச்சம் சேர ஆசை

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

இன்று ஆசிரியர் தினம்

இன்று ஆசிரியர் தினம் 

குருவே சரணம் !

மாதபிதா குரு தெய்வம்.

யாரெல்லாம் ஆசிரியர்? 

நன்றெது தீதெது என உணர்த்தும் யாரும் ஆசிரியரே!

அப்படியாயின் அனுதினமும் திட்டி திட்டி வைரமாக்கும் அன்னையும் ஆசிரியரே!

அன்பு காட்டி அரவணை த்துச்  செல்லும் ஆசிரியரும் அன்னையே!

பாசம் என்ற பரிசளித்தாகிலும் பண்பாளனாக்கும் தந்தையும் ஆசிரியரே!

தப்பென்ற பட்டபோது தன் நண்பனை வலிந்து கூறி நன்னெறிக்குய்ப்பவனும் 
ஆசிரியரே!

குடிமைப்பண்பினை குற்றவாளிக்கும் வாழ்வால் வாழ்ந்து உணர்த்தும் யாரும்  ஆசிரியரே!

வாழ்வியல் நெறிகளை வளர்விக்கும் எவரும் ஆசிரியரே!

குழந்தையானாலும் ஏதோ ஒரு வகையில் பெரியவர்களுக்கு பாடம்  புகட்டும் மழலைகளும் ஆசிரியரே!

    ஆசிரியர் தினமான இன்று, சமுதாயம் வளர  அ, ஆ முதலாகிய உயிர்களையும், க், ங் முதலாகிய மெய்கயளையும் றௌ நௌ வரை  முடியும் உயிர் மெய்களையும் கற்பித்து  ஃ - ஐ ஆயுதமாக கொண்டு அடுத்தடுத்து ஏணிப்படிகளாய் சிறு வார்த்தை, வாக்கியம் ,  பத்தி, பக்கம், பக்கங்கள் என வளர்வித்த ஆசிரியர்களுக்கு வாழ்த்த வயதின்மையால் வணங்குகிறோம்.

என் சுசீலா டீச்சருக்கு என் ஆத்மாவின் வணக்கமும் ஆசி யாசிப்பும் வேண்டுவதில் பெருமிதம் கொள்கிறேன்.

வாழ்க ஆசிரியர் குலம்!        வளர்க மாணவர் நலம்!    பெருகுக சமுதாய வளம்!