திங்கள், 27 ஏப்ரல், 2015

அப்பா - நீங்காத நினைவுகள்

அன்றொரு நாள் இதே தேதியில் அப்பா இறந்தார். மனம் ஏற்காத அந்த நிதர்சனத்தை ஒரு வழியாக ஏற்றுக் கொண்டோம். மண்ணுக்கு உரமான அவரை தனித்து விட மனமில்லாத அம்மாவும் மனம் விரும்பி மரணம் ஏற்றார். உரமோடு உரமாக  அப்பாவுடன் அம்மா தன்னைக் கரைத்துக்  கொண்டாள். பாதைகளில் வயதான தம்பதியரைக் காண நேரும் போதெல்லாம் மனது கரைகிறது. ஆனால் மனமோ அவர்களை வாழ்த்துகிறது. இவர்கள் என் பெற்றோரின் பிம்பங்கள் ஆயிற்றே?!

புதன், 22 ஏப்ரல், 2015

World Book and Copyright Day

World Book and Copyright Day

April 23, 2015 in the World


World Book and Copyright Day (also known as International Day of the Book or World Book Day) is observed on April 23, 2015. The annually celebrated day is organized by UNESCO to promote reading, publishing and copyright. It was first celebrated in 1995.

The connection between 23 April and books was first made in 1923 by booksellers in Spain as a way to honor the author Miguel de Cervantes who died on that day. Nowadays the World Book and Copyright Day is observed in over 100 countries, where schools, private businesses, voluntary organizations and lots of more people and groups come together to pay a tribute to authors and books.

In 1995, UNESCO decided that on this date the World Book and Copyright Day should be celebrated because of the Catalonian festival and because the date is also the anniversary of the birth and death of William Shakespeare and some other authors.

Copyright is a legal concept, enacted by most governments, giving the creator of an original work exclusive rights to it, usually for a limited time. It is "the right to copy", but also gives the copyright holder the right to be credited for the work and other, related rights. It is an intellectual property form.
Where is World Book and Copyright Day?
Worldwide
World

When is World Book and Copyright Day?
Thursday, the 23rd of April 2015


தலை குனிந்து படித்தால் தலை நிமிர்ந்து வாழலாம் 

இன்று என்ன புத்தகம் படித்தாய் என்பது ஒவ்வொரு நாளும் நமக்கு நாம் முன் வைக்க வேண்டிய  கேள்வி? 

அதற்குத் தகுதியான பதில் நம்மிடம் இருக்குமேயானால் நாளை தலைமைப் பதவிகள் நம்மை விரும்பி வரும்!

தினம் ஒரு புத்தகம் படிப்போம். சிந்தனைச்  சிற்பங்களை நமக்குள் செதுக்குவோம்!

புத்தக மற்றும் காப்பி ரைட்ஸ் தின வாழ்த்துக்கள் !

World Earth Day - உலக புவி நாள்


அன்னை பூமி 
அன்னம் தரும் சாமி !
Image result for world earth day in tamilஅன்பாய் குவிவோம் நம் சிரம் 
அவள் தந்த மரம் 
அது நமக்கு என்றும் வரம்!
அந்நிய முறையாம் 
இரசாயன முறைப் பயிர் 
இனிக் குடிக்கும் நம் உயிர்!
இயற்கை முறை பயிர்ப்பு 
அன்னைபூமிக்கு தரும் உயிர்ப்பு!
அன்னையர் கை விடப்பட்டால் 
அவர்களுக்கு இல்லம் உண்டு !
அன்னை பூமி கைவிடப்பட்டால் 
இல்லம் இல்லை நாம் வாழ!
எனவே உலகுக்காக இல்லை -
எனினும் நமக்காக காப்போம்!
எவ்வாறு? 
அறம் செய்வோம் - மரம் வளர்த்து!
இறைவன் அருட்கொடைகளை 
இனியாவது காப்போம்!
அதை எந்த நாளும் மறவாது செய்வோம்!



அனைவருக்கும் உலக புவி நாள்   வாழ்த்துக்கள்!

Reduce - Reuse - Recycle - To save our mother EART...

 


HAPPY   EARTH  DAY

வியாழன், 16 ஏப்ரல், 2015

எண்ணம் செயலாய், பழக்கமாய் - எம். எஸ். உதயமூர்த்தி

                                                      "ஒரு மனிதனின் பழக்க வழ க்கங்கள் அவனை அறிந்து கொள்ள உதவும் நல்ல மனக்கண்ணாடி" - என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
                        நல்ல எண்ணங்களிலிருந்து நல்ல பழக்கங்கள் ஏற்படுகின்றன.அதேபோல் நல்ல பழக்கவழக்கங்களை வலுக்கட்டாயமாக அனுசரிப்பத்தின் மூலம், நமது மன ஓட்டங்களை - எண்ணங்களை மாற்றலாம். சுத்தமான சலவை வேஷ்டியையும், சலவைச் சட்டையையும் அணிந்து புறப்படும் போது மனத்தில் எழும் புத்துணர்ச்சியை, ஒரு திருப்தியை, ஒரு பெருமையை ஒரு கணம் நினைத்து பாருங்கள். புதிதாகப் போகும் ஓர் அலுவலகத்தினுள் எல்லாம் கச்சிதமாக, ஒழுங்காக, துப்புரவாக, இருக்கும் ஒரு நிலை, நம் மனதில் எப்படி ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள். மன துயரத்திலோ சோகத்திலோ மூழ்கும் போது ஓர் இனிமையான பாட்டை முணுமுணுத்துப் பாருங்கள். நம் மனநிலை மாறுபடுவதை உணர்வீர்கள். 
                                                            பிரச்சினைகளுடன் வரும் மனநோயாளிகளை முதலில் மருத்துவர் ஓர் இதமான சாய்வு நாற்காலியில் படுக்கச் சொல்லுகிறார். இதமான படுக்கை ஒரு நிம்மதியையும், பாதுகாப்பையும் தருகிறது. இதனால் எண்ண நிலை மாறுகிறது.
                                                                    ஊமைத்துரை ஒரு துரும்பை கையிலெடுத்து அதை நான்காகக் கிள்ளி உள்ளங்கையில் வைத்து ஊதுவாராம். அவரது மன உணர்வுகளில் இத்தகைய செயல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கவனியுங்கள். திறமை மிக்க திரைப்பட இயக்குனர்கள் கதாபத்திரத்தின் கோபத்தையோ உணர்ச்சியையோ வசனம் மூலம் வெளிப்படுத்துவதை விட்டு, கதாபாத்திரத்தின் ஒரு சிறு செயல் மூலம் மன ஓட்டங்களைக் காட்டுகிறார்கள்.

                                                                    நமது புற நடவடிக்கைகளை மாற்றவும் அதன் மூலம் நம் மன நிலையை மாற்றவும் மன நூலார் பல வழிகளைக் கூறுகின்றனர்.
                                                                   "முகத்தில் புன்னகையைத் தவழ விடுங்கள். கொஞ்சம் கம்பீரமாக நின்று பருங்கள். தலை நிமிர்ந்து நடவுங்கள். நடக்கும் வேகத்தை சிறிது அதிகப்படுத்திப்  பாருங்கள். கூட்டங்களில் முன் வரிசைகளில்  உட்கார்ந்து பழகுங்கள். பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாகப் பேசிப் பாருங்கள். பிறருடன் பேசும்போது, கண்களைக் கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரை நேரே நோக்கிக் கண்களைச் செலுத்துங்கள்" என்கின்றனர் மனநூலார். தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் இதைவிட நல்மருந்து வேறில்லை.
                                                                




















Aksharamanamalai with Tamil lyrics