சனி, 30 மே, 2015

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று

உலக புகையிலை எதிர்ப்பு நாள் இன்று
புகையிலையால் மனித உடல் நலனுக்கு ஏற்படும் தீங்கினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் 1987-ஆம் ஆண்டு மே மாதம் 31-நாளில் புகையிலை எதிர்ப்பு நாளாக அறிவித்தது.
புகையிலையை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது மனிதனின் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிப்படையச் செய்கிறது. வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்று நோய், காசநோய், விடாத இருமல், மூச்சுத்திணறல், இருதய நோய், ஆஸ்துமா, சிறுநீரகக் கொளாறு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களை ஏற்படுத்தி மனிதனின் ஆயுட் காலத்தை குறைக்கிறது. புகையிலைப் பொருட்களில் 40-க்கும் மேற்பட்ட நிக்கோடின், ஹைட்ரஜன் சயனைட், ஆர்சனிக், கார்பன் மோனோ ஆக்ஸைடு, ஃபார்மால்டிஹைடு போன்ற கொடிய நச்சுப்பொருட்கள் உள்ளன. இவை வேகமாக முதுமைப் பருவத்தை தோற்றுவிக்கிறது.
புகையிலைப் பொருட்களை கைவிட மனநல மருத்துவரை அணுகலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான இசை, புதிய மொழி, தியானம், ஓவியம் வரைதல், யோகாசனம் போன்றவற்றில் கவனத்தை செலுத்தலாம். தன்னுடைய குடும்ப நலனை மனதில் நிறுத்தி புகையிலை அடிமைத் தனத்திலிருந்து விடுபட இந்நாளில் உறுதி செய்வொம்.
YENI - ஏணி's photo.
நன்றி  - Yeni  - ஏணி