திங்கள், 24 அக்டோபர், 2016

இறைவா! நன்றி!

மீனாவிற்கு இன்று பெண் குழந்தை பிறந்து உள்ளது. மகளே!  உனக்கு என் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். ஒரு புது பெண் ஜென்மம் புதிய உலகைப் படைக்க வந்துள்ளது. இறைவா! தாயுமானவரே உம் சன்னதி ஏறி வருவேன். எனக்கு காலிலும் மனதிலும் உடலிலும் பலம் தர வேண்டும். ஏனெனில் நீர் இருப்பது உச்சியில்! நானோ மடுவில்! உயர விரும்பி உயரத்தில் உள்ள உன்னை சுகப் பிரசவம் செய்து கொடுத்த உன்னை நினைந்து நன்றி கூறுகிறேன்.


ஞாயிறு, 23 அக்டோபர், 2016

நடப்பவையெல்லாம் நன்மைக்கே

முடிவு எடுப்பதில் முத்தாரம் எப்பொழுதும் அசமந்தம் தான். ஒவ்வொன்றின் மீதும் ஏதோ ஒரு sentimental  அட்டாச்மெண்ட் வைத்துக்கொண்டு, விட்டு விலக மறுத்து இரண்டுங்கெட்டான் ஆக நடுவில் நிற்பவள். சொல்லப் போனால் பிழைக்கத் தெரியாத தர்க்கவாதி.
தற்போது இருக்கும் பணி இடத்திலிருந்து விலக இப்பொழுது தான் மனம் முனைப்பாக உள்ளது. ஆம் சில பல விஷயங்கள் மனதை மிக வருத்துகிறது. மாத சம்பளத்தில் பத்தில் ஒரு பங்கை பள்ளிக்கே விட்டு வருகிறேன், சில நாட்கள் லேட்டாக செல்வதால். பனிச் சுமை அதிகமாகி வருகிறது. நமக்குத் தரப்படவேண்டிய மரியாதை சரியில்லையோ எனத் தோன்றுகிறது.

இத்தனை நாளும் என் வீடு போல் புத்தகங்களை, நோட்டுகளை, பொருட்களை என் விருப்பம் போல் அலமாரிகளில் வைத்துப் பராமரித்து வந்தேன். சில பல கசப்பான சம்பவங்களுக்குப் பிறகு பள்ளி வளாகம் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. அதில் ஒன்று அலுவலக அறை உள்ளிட்ட முதல்வர், துணை முதல்வர் அறைகள் மழலையர் வகுப்பறையாக மாறியது தான். எனவே துணை முதல்வருக்கான அறை கணினி ஆய்வகத்தின் ஆசிரியர் அறை என ஒதுக்கப்பட்டது.

 ஒரு விதத்தில் இது நல்லதாகவே பட்டாலும், ஒரு உயர் அதிகாரியின் முன்பு சுதந்திரமாக எப்படி என் ஆய்வகத்தில் உலா வர முடியும்? மனது இயல்பாய் இல்லாமல் ஏதோ ஒரு கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த வருடம் எப்படியும் இப்பள்ளியிலிருந்து விலகி விட முடிவு செய்து விட்டேன். கடவுளே தொட்டதெற்கெல்லாம் காசு தேடும் இவ்வுலகத்தில் காசை வெறும்  பேப்பராகப் பார்க்கின்ற பரந்த மனம் தருவாய். அப்படி எனக்குக் கிடைக்கின்ற pricefull  பேப்பரை பலருக்கும் உதவும் வண்ணம் பிரயோகிக்க உதவுவாய் இறைவா. எனக்கு மாற்று வேலை நல்ல இடத்தில நல்ல வரவோடு அமைப்பாய்  என் தலைவா!
                                                                           இப்படிக்கு
                                                             Sentimental Idiot  முத்தாரம் 

செவ்வாய், 18 அக்டோபர், 2016

மனதைத் தொட்ட வாசகம்

தன் உழைப்பால் வாழ்பவன் சிவன்!
பிறர் உழைப்பில் வாழ்பவன் எமன்!
சிவனும் எமனும் மனிதரே!

                 ஆட்டோ வாசகம்.

இதன் மூலம் சொல்ல வருவது சமயத்தில் உதவுவர் கடவுள் என்றால் தக்க நேரத்தில் உதவாதவன் எமன் எனக் கொள்ளலாம் என நான் எண்ணுகிறேன்.
எப்படி இருப்பினும் இவ்வாசகத்தில் சிவன் சம்மந்தப்பட்டுவிட்டதாலேயே I like it very much.

இருக்கும் வரை சிவனருள். இறக்கும் போது சிவன் மேற்பார்வையில் எமனருள்! இறந்த பின் சிவலோக வாசம். அங்கு என் தந்தை தாயுடன் நானிருக்க பற்றில்லாதவனாகிய சிவனை யாசிக்கிறேன்.


picture downloaded from my school lab

சனி, 15 அக்டோபர், 2016

அப்துல் கலாம்
ஆதலால் உமக்கு சலாம் - உன்
இறவாப் புகழ் மூலம்
ஈரேழ் உலகம்
உனக்காக!
ஊரார் உம்மைப் புகழ
எம் அன்னைத் தமிழ்
ஏட்டில் உன்னைப் பாட ஆசை!
ஐ.நா. சபையில்
ஒன்றே உலகம் என்றீர்!
ஓதுவாய் புத்தகங்களை அனுதினம்  என்றீர்!
ஒளவியம் பேசாத
எஃகு  நாயகனே!
வாழ்க நீவிர்! மீண்டும்
உமக்கு என் சலாம்!