வியாழன், 16 ஏப்ரல், 2015

எண்ணம் செயலாய், பழக்கமாய் - எம். எஸ். உதயமூர்த்தி

                                                      "ஒரு மனிதனின் பழக்க வழ க்கங்கள் அவனை அறிந்து கொள்ள உதவும் நல்ல மனக்கண்ணாடி" - என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
                        நல்ல எண்ணங்களிலிருந்து நல்ல பழக்கங்கள் ஏற்படுகின்றன.அதேபோல் நல்ல பழக்கவழக்கங்களை வலுக்கட்டாயமாக அனுசரிப்பத்தின் மூலம், நமது மன ஓட்டங்களை - எண்ணங்களை மாற்றலாம். சுத்தமான சலவை வேஷ்டியையும், சலவைச் சட்டையையும் அணிந்து புறப்படும் போது மனத்தில் எழும் புத்துணர்ச்சியை, ஒரு திருப்தியை, ஒரு பெருமையை ஒரு கணம் நினைத்து பாருங்கள். புதிதாகப் போகும் ஓர் அலுவலகத்தினுள் எல்லாம் கச்சிதமாக, ஒழுங்காக, துப்புரவாக, இருக்கும் ஒரு நிலை, நம் மனதில் எப்படி ஒரு சுறுசுறுப்பை ஏற்படுத்துகிறது என்று எண்ணிப் பாருங்கள். மன துயரத்திலோ சோகத்திலோ மூழ்கும் போது ஓர் இனிமையான பாட்டை முணுமுணுத்துப் பாருங்கள். நம் மனநிலை மாறுபடுவதை உணர்வீர்கள். 
                                                            பிரச்சினைகளுடன் வரும் மனநோயாளிகளை முதலில் மருத்துவர் ஓர் இதமான சாய்வு நாற்காலியில் படுக்கச் சொல்லுகிறார். இதமான படுக்கை ஒரு நிம்மதியையும், பாதுகாப்பையும் தருகிறது. இதனால் எண்ண நிலை மாறுகிறது.
                                                                    ஊமைத்துரை ஒரு துரும்பை கையிலெடுத்து அதை நான்காகக் கிள்ளி உள்ளங்கையில் வைத்து ஊதுவாராம். அவரது மன உணர்வுகளில் இத்தகைய செயல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதைக் கவனியுங்கள். திறமை மிக்க திரைப்பட இயக்குனர்கள் கதாபத்திரத்தின் கோபத்தையோ உணர்ச்சியையோ வசனம் மூலம் வெளிப்படுத்துவதை விட்டு, கதாபாத்திரத்தின் ஒரு சிறு செயல் மூலம் மன ஓட்டங்களைக் காட்டுகிறார்கள்.

                                                                    நமது புற நடவடிக்கைகளை மாற்றவும் அதன் மூலம் நம் மன நிலையை மாற்றவும் மன நூலார் பல வழிகளைக் கூறுகின்றனர்.
                                                                   "முகத்தில் புன்னகையைத் தவழ விடுங்கள். கொஞ்சம் கம்பீரமாக நின்று பருங்கள். தலை நிமிர்ந்து நடவுங்கள். நடக்கும் வேகத்தை சிறிது அதிகப்படுத்திப்  பாருங்கள். கூட்டங்களில் முன் வரிசைகளில்  உட்கார்ந்து பழகுங்கள். பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாகப் பேசிப் பாருங்கள். பிறருடன் பேசும்போது, கண்களைக் கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரை நேரே நோக்கிக் கண்களைச் செலுத்துங்கள்" என்கின்றனர் மனநூலார். தன்னம்பிக்கைக்கும் தைரியத்திற்கும் இதைவிட நல்மருந்து வேறில்லை.
                                                                




















Aksharamanamalai with Tamil lyrics