வெள்ளி, 30 செப்டம்பர், 2016

தன் தாயின் மேல் கொண்ட மீதூறிய அன்பினால் என் வகுப்பு மாணவன் - சுதன் . வேல் எழுதிய கவிதை

ஒரு மகன் நான் கருவில் வளர தன்
தாலியையே இறைக்குப் பிச்சை போட்டவளே!

வயிறு கிழித்து வலி தந்தேன்! அழ மறுத்தேன்!
மருத்துவச்சி கண் கலங்க நெஞ்சடைக்க அழுத்தவளே!

உயிர் பிழைத்தேன்! உனைத்தேடி குரலினேன் பச்சிளமாய்!
கடவுளோசை கேட்டது போல் மனம் குளிர மயங்கியவளே!

தட்டிலிருந்த உணவு அமுது போல் இல்லையடி!
காரணம் உன் உமிழ் நீர் அதிலில்லை என்னமுதவளே!

திறமைப்பால் ஊட்டி மேடைப் படியேறி புகழ் பறக்க
வீட்டுப் படியேறி கால்பதிய பூவிற்ற புனிதவளே!

உழைத்து உழைத்து உடல் ஒடுங்கத் தேய்ந்து
வளர்பிறையாய் எனை வளர்த்த வலியறியா வானவளே!

அழகூட்டா உலகழகியானாய் எந்தன் விழியுள்!
நான் ரசித்த முதல் பெண்ணும் நீயே முருகியவளே!

அறிவு பெற்று படிக்க வைக்க கழுத்தில் நகையிறக்கி
பதக்கம் என் கழுத்தில் ஏற வைத்த கனியவளே!

திருவிழாப் போல் என் திருமணம் நிகழ உனக்காசை
மரணமில்லாமல் நாம் அன்பில் வாழ வரம் கொடு என் மங்கவரமே....

                       -   சுதன் . வேல்

தன் தாயின் மேல் கொண்ட மீதூறிய அன்பினால் என் வகுப்பு மாணவன்   -   சுதன் . வேல் எழுதிய கவிதை இது. மிக நன்று. அன்னையின் அன்பினால் எதையும் சாதிப்பான் என்ற நம்பிக்கையுடன் கடவுளாசி யாசித்து , வாழ்வில் முதல் நிலைக்கு வளர வாழ்த்துகிறேன்!

வியாழன், 29 செப்டம்பர், 2016

Happy Birthday To my dear Sridevi

I don't know where you are.

With love and gratitude I always breath about you

God bless you and your family.

Hope you have your kids. Now My blessings are to them 

என் வகுப்பறையில் இன்றைய பதிவுகள் 28-09-2016

இன்று முதல் பருவத்தின் இறுதி நாள். மாணவர்கள் அடுத்து வரும் மூன்று நாட்களையாவது விடுப்புக் கொடுத்தார்களே என்ற ஆதங்க சந்தோஷத்துடன் இருந்தனர். இரண்டு நாட்களாகவே மாணவர்களிடம்,  12 அ , ஆ  பிரிவினர் கலக்கப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்படவிருக்கிறார்கள் என்பது இலை மறை காயாகத்  தெரிவிக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் அவர்கள் செய்முறை தேர்வு முடிந்து கணித வகுப்பிற்கு தயாராக இருந்த சமயம் நான் சென்று புது மாணவர் பட்டியலை வாசித்தேன். அது சமயம் மாணவர்களிடையே சிறு சல சலப்பு ஏற்பட்டது. அஃது அதிருப்தியா? அல்லது ஆதங்கமா? என அறியேன். ஆனால் எனக்கு மனது ஏனோ வலித்தது. மாணவர்கள் என்னமோ நம் கண் முன்னேதான் உலாவருவார்கள். ஆனாலும் ஏனோ பிரிவதாக மனம் வாடியது. புது மாணவர்களை நான் எப்படி வழி நடத்துவேன் என புரியவில்லை. கடவுள் தான் கை கொடுக்க வேண்டும். சுதன், சூர்யா, ஹரிஹரன் போன்றோர் ஷாகுல்-க்காகப் ( Today Shahul - absent)பேசினார்கள். ஷாகுல் ஏற்கெனவே மன அழுத்தத்தில் இருப்பதாகவும் இது தெரிந்தால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே உகந்த உபாயம் ஒன்று செய்ய வேண்டிக் கொண்டார்கள். நானும் முயற்சி செய்கிறேன் என்றிருக்கிறேன். ஆனால் மாணவர்களிடம் என் பாடத்தை Mr.D.K எடுப்பார் என சும்மா கூறியுள்ளேன். ஆனால் அவர்கள் மொழிப் பாடத்திற்குப் பிரிந்து செல்வது போல என் வகுப்பிற்கு வருவார்கள் என்பதை நான் கூறவில்லை. வரும் திங்கள் அன்று  அது அவர்களுக்கு ஆனந்தமாகவோ அல்லது அதிர்ச்சியாகவோ  இருக்கக் கூடும்.

மாற்றங்கள் மாறாதது. முதல் சந்திப்பில் வேண்டாததாக இருக்கக் கூடும். காலப் போக்கில் பழகி விடும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்.

சனி, 17 செப்டம்பர், 2016

யாருடா அந்த பொண்ணு

வேலை முடிந்து வீட்டிற்குள் நுழையும் போது காதில் விழுந்த வாசகம் "யாருடா அந்த பொண்ணு". கேட்டதும் பகீர் என்றது. "அட காலக் கொடுமையே! இந்த சின்னப் பையன் கூட இந்தக் கூத்து அடிக்கிறானே என நினைத்துக் கொண்டு என் வீட்டு வாயிலில் நின்ற வண்ணம் நாலு அடியில் எட்டும் தூரத்தில் உள்ள சாய்ராம் வீட்டின் உள்ளே நடைபெறுவதை கண்ணுற்றேன்.
சாய்ராம் அவன் அம்மா கேட்பதற்கு எந்த பதிலும் கூறாமல் தலை குனிந்த வண்ணம் உட்கார்ந்திருந்தான். அம்மா திரும்பத் திரும்பக் கேட்டும் அவன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. இஃது இன்னும் தொடர்ந்தால் பையன் அடி வாங்க நேரிடும் என்பது உரைத்ததனால் நான் இடைமறித்தேன்
      "என்ன சாய்ராம் அம்மா! என்ன நடந்தது?", கேள்வி விசாரிப்பதற்காக என்றாலும் மனது சுவாரசியமான தகவல் ஒன்றிற்கு  அலைந்தது.அலைந்தது.

 "அஃது ஒன்றும் இல்லைங்க! இவங்க மிஸ்-க்கு போன் போட்டேன். அப்ப அவங்க சொன்ன தகவல்தான் என் மனத்தைக் கஷ்டப் படுத்துகிறது"

" என்ன சொன்னாங்க" - ஆவலுடன் நான் கேட்டேன்.

"இரண்டு நாளாக கிரேயான் பென்சில் எதுவும் பத்திரமாகக் கொண்டு வர மாட்டேன் என்கிறான். அதனால் அவங்க மிஸ்க்கு போன் போட்டுக் கேட்டேன். அப்போ அவங்க கிளாஸ் பொண்ணோட கிரேயான் இவன் எடுத்து வந்து விட்டதா அந்த பொண்ணோட அம்மா புகார் செய்ததாகக் கூறினார்கள். அந்த பொண்ணு பேரைச் சொன்னார்கள். அதை மறந்து விட்டேன். அதான் கேட்டேன். ஒன்றும் சொல்ல மாட்டேங்கறான். கேட்டதும் சப்பென்றாகி விட்டது. ச்சே! இவ்வளவுதானா இதற்குத் தானா இவ்வளவு Build Up!.
இருந்தாலும் வந்த வேலையைப் பக்காவாக முடிக்க வேண்டும்  இல்லையா. அதனால் கேட்டேன், "அப்புறம் மிஸ் என்ன சொன்னாங்க!"
"இது முதல் வகுப்பு படிக்கும் பிள்ளைகளிடம் சகஜம். பொருட்களை பத்திரமாக திரும்ப எடுத்துச் செல்லும் பக்குவம் அவர்களுக்குக் கிடையாது. நிறைய பிள்ளைகள் பொருட்களை இங்கேயே விட்டுச் சென்று விடுகிறார்கள் என அவங்க பதில் சொல்லி விட்டார்களாம். சொன்னதோடு விடாமல் எதற்கும் கேட்போமே என இருவரையும் விசாரித்தேன். இரு குழந்தைகளுமே திரு திருவென விழித்தார்கள் - என்று சொன்னாங்க. இவன் பொருள் இல்லை என நான் போன் போட்டுக் கேட்டால் அவர்கள் வேற புகார் வைக்கிறார்கள். கேட்டது நல்லதாய் போச்சு!". 
"சரிங்க. அதான் மிஸ் சொல்லிட்டாங்க இல்ல. திரும்ப திரும்பத் விசாரிக்கிறது அவனுக்குக் கஷ்டமாக இருக்கிறது போல! விட்டுடுங்க" - எங்க கூறியவாறு என் வீட்டினுள் நுழைந்தேன்.

புதன், 14 செப்டம்பர், 2016

அன்னையின் தாலாட்டு

எம் அன்னை எங்களைத் தாலாட்ட ஒரு பாடலை அடிக்கடி பாடுவார்கள். இப்பாடல் எம் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அத்துப்படி. நாங்களும் இக்குடும்பத்தில் புதிதாய் வருகை தரும் புது அங்கத்தினர்களுக்கு இதனைப் பாடியே தாலாட்டுகிறோம் என்பதில் பேருவகை கொள்கிறோம்.

பாடல் வரிகளை யாரோ ஒரு அன்பர் யூடியூபில் அழகாக வரித்திருந்தார். அவரின் உதவியால் பாடல் வரிகளை இப்பதிவில் சமர்ப்பிக்கிறேன். நன்றி அன்பரே!
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, மண்ணுக்கு, மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்குப் பாரமா, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, மலடி மலடியென்று, வையகத்தார் ஏசாமல், மலடி மலடியென்று வையகத்தார் ஏசாமல், தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்கு, பாரமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், சிரித்தால், முத்து திரும், வாய் திறந்தால், தேன் சிதறும், சிரித்தால், முத்துதிரும், வாய் திறந்தால், தேன் சிதறும்,பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா, குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா,குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, - mannuku maram paarama marathku - movie:- Thai Piranthal Vazhi Pirakkum (தை பிறந்தால் வழி பிறக்கும்)

அன்னையின் தாலாட்டு

எம் அன்னை எங்களைத் தாலாட்ட இப்பாடலை அடிக்கடி பாடுவார்கள். இப்பாடல் எம் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் அத்துப்படி. நாங்களும் இக்குடும்பத்தில் புதிதாய் வருகை தரும் புது அங்கத்தினர்களுக்கு இதனைப் பாடியே தாலாட்டுகிறோம் என்பதில் பேருவகை கொள்கிறோம்.

பாடல் வரிகளை யாரோ ஒரு அன்பர் யூடியூபில் அழகாக வரித்திருந்தார். அவரின் உதவியால் பாடல் வரிகளை இப்பதிவில் சமர்ப்பிக்கிறேன். நன்றி அன்பரே!
மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, மண்ணுக்கு, மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்குப் பாரமா, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, வாடிய நாளெல்லாம், வருந்தி வருந்தித் தவமிருந்து, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, தேடிய நாள் தன்னில், செல்வமாய் வந்தவளே, மலடி மலடியென்று, வையகத்தார் ஏசாமல், மலடி மலடியென்று வையகத்தார் ஏசாமல், தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, தாய் என்ற, பெருமை தனை, மனம் குளிரத் தந்தவளே, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த,குழந்தைத் தாய்க்கு, பாரமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், அழுதால் அரும்பு திரும், அண்ணாந்தால், பொன் உதிரும், சிரித்தால், முத்து திரும், வாய் திறந்தால், தேன் சிதறும், சிரித்தால், முத்துதிரும், வாய் திறந்தால், தேன் சிதறும்,பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, பிள்ளையைப் பெற்றுவிட்டால், போதுமா, பேணி, வளர்க்க வேனும், தெரியுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா, குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, அல்லலைக் கண்டு, மனசு அஞ்சுமா,குழந்தை, அழுவதைக் கேட்டு, மனசு மிஞ்சுமா, மண்ணுக்கு மரம் பாரமா, மரத்துக்கு இலை பாரமா, கொடிக்குக், காய் பாரமா, பெற்றெடுத்த, குழந்தைத் தாய்க்குப் பாரமா, - mannuku maram paarama marathku - movie:- Thai Piranthal Vazhi Pirakkum (தை பிறந்தால் வழி பிறக்கும்)

சனி, 10 செப்டம்பர், 2016

தோட்டம் ஒன்று கலைக்கப்பட்டது - ஒரு கண்ணீர் கதை.

என்றைக்கும் போல் தான் இன்றும் விடிந்தது. காலையில் பள்ளி 9.30க்கு வந்தால் போதும் என சுற்றறிக்கை வந்ததால் தாமதமாகவே [ என்றைக்கு சீக்கிரம்????!!!!] கிளம்பினேன். ஆனால் நான் கிளம்பிய நேரத்திற்கு 9.00 மணிக்கெல்லாம் பள்ளியில் இருந்திருக்க வேண்டியவள்.
என் கிரகம் ஹவுஸ் ஓனர் வடிவில் வாசலில் வந்து நின்றது. ஆம். குருவிக் கூட்டைக் கலைப்பது போல் மாடியில் செல்லமென நான் வளர்ந்திருந்த தங்கங்களை அப்புறப்படுத்தக் கூறினார். ஏனெனில் மாடியில் வசிக்கும் குடும்பத்தார் சில நாட்களாக காய்ச்சலால் அவதியுறுகின்றனர். காரணம் கொசுவாக இருக்கலாம் என மாநகராட்சித் துறையினர் சந்தேகித்து பார்வையிட வந்திருந்தனர். அவர்கள் செடிகளில் தண்ணீர் தேங்கி இருக்கலாம்[ ஆனால் நானோ ஒரு டம்ளர் அளவிற்கு மட்டுமே தண்ணீர் ஊற்றுகின்றேன்]. நேற்று பெய்த மழை தண்ணீர் தேங்கி இருப்பதாகக் காட்டியிருக்கிறது. 
A    Flashback
காக்கை இட்ட எச்சங்கள் வேம்பு செடிகளாக உயர உயர வளர்ந்திருந்தது. ஏற்கெனவே ஹவுஸ் ஓனர் அதனை அப்புறப்படுத்தக் கூறியிருந்தார். வளர்ந்தபின் அப்புறப்படுத்துதல் ஆகாது என சப்பைக்கட்டு வேறு.
அந்த வேம்பு செடி என் friend . ஆம். எப்போ நான் மேல் மாடி சென்றாலும் அவள் அசைவு அதிகமாகவே இருக்கும். நானும் மற்ற செடிகள் அசைகின்றனவா என செக் செய்வதுண்டு. என் எண்ணமோ  பிரமையா அது எனக்குப் பிடித்து இருந்தது.
வளர்த்த பெண்ணை நல்ல இடம் பார்த்து மனம் முடிக்க யாரும் பாடு படும் பெற்றோர் போன்ற நிலைமை எனக்கு. என் தோழியை நல்லிடம் சேர்ப்பது எவ்வாறு என சிந்திக்கையில் என் நினைவுக்கு வந்தார் என் பள்ளியில் உடன் பணிபுரியும் சகோதரர் ஸ்ரீதர் சாரும் என் வகுப்பு மாணவர்களும் தான். அவரிடம் கேட்டிருந்தேன். சரி என்றிருந்தார். என் வகுப்பிலும் கேட்டேன்,"மரம் நடுவதில் யாருக்கேனும் ஆர்வம் உள்ளதா", என்று. எப்போதும் போல் சுதன் தன் கையை உயர்த்தியது மனதுக்கு ஆறுதல் தந்தது. அப்துல் கலாம் பிறந்த நாளின் போது மரம் நடுதலை ஒரு event ஆக வைத்து விடலாம் என எண்ணி இருந்திருந்தேன்.   .      .  
Flashback over 

இன்று தம்பிகள் என்னை சரமாரியாகத் திட்டி தீர்த்து விட்டனர். சொந்த வீடு போல் எதற்காக இப்படி செடிகள் நட்டு கஷ்டப்படுத்துகிறாய் என்று. திட்டினாலும் அப்புறப்படுத்த உதவினார்கள். இரண்டு மூன்று செடி பைகளை கில் பார்க் அருகில் வைத்து விட்டு வரச்  சொன்னேன். ஏனெனில் செடிகள் மீது ஆர்வம் உள்ள வேறு எவரேனும் அதற்கு ஆதரவு தரக்கூடும் என ஆழமாக நம்பினேன். தம்பி இரு பைகளை கொண்டு வைத்து விட்டு வந்தான். இதற்கு இடையில் ஹவுஸ் ஓனர்  கொஞ்சமாக வைத்துக் கொள்ளுங்கள். [நல்லவங்க தான்]  இதற்கு காரணம் நாங்க இல்லைனு சொன்னார். ஆனால் நான் வைத்திருந்த செடிகள் எல்லாம் mosquitto repellent தான். அந்நேரம் வந்திருந்த மாநகராட்சி பணியாளர்கள் இதனை நாங்கள் அப்புறப்படுத்தக் கூறவில்லை அதற்கு பதிலாக தள்ளி தள்ளி வைக்கவே அறிவுறுத்தினோம் என்றார். 

இவ்வேலைகளை செய்யச் செய்ய கண்களில் இருந்தது கண்ணீர் அடக்க மாட்டாமல் வந்த வண்ணமாகவே இருந்தது. இருந்தும் செய்தென். அக்கா சில செடிகளை அவர்கள் வீட்டிற்கு கொண்டு சென்று விடுவதாகக் கூறியது ஒரு மிகப் பெரிய ஆறுதல்.இடையில் பள்ளிக்கு போன் செய்து பெர்மிஷன் or லீவு சொன்னேன். ஆனால் கண்டிப்பாக declaration form  என் மாணவர்களுக்கு தர வருவேன் எனக் கூறினேன். இதைக்  கூறக்  கூட முடியாமால் துக்கம் தொண்டையை அடைக்க பேசினேன். ஒரு வழியாக 10 மணிக்கு மேல் புறப்பட்டு 10.30க்கு பள்ளியை அடைந்தேன். போகும் போது வேம்புகளை வண்டியின் முன்புறம் வைத்து எடுத்துச் சென்றேன். எங்கள் தலைக்கு மேல் உயர்ந்திருந்த செடியுடன் நாங்கள் வண்டியில் செல்வதை சிலர் விநோதமாகவே பார்த்தனர். என் பள்ளி பின்புற மருத்துவமனை வாயிலில் வாட்ச்மேனிடம் சொல்லி ஓரமாக வைத்துவிட்டு பள்ளி உள்ளே சென்றேன். பள்ளியில் இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரங்கோலி competition நடத்தினார்கள். என்னை மூன்று நடுவர்களில் ஒருவளாக அனுப்பித்தார்கள். பலரும் நன்றாகவே செய்திருந்தனர். Judgement வேலை  முடிந்தபின் எக்ஸாம் முடியும் தருவாயில் 12.45 க்கு என் மாணவர்களை சென்று கண்டு declaration  form மற்றும் சலான் கொடுத்து விட்டு நான்கு நாள் லீவு முடிந்து பரிட்சைக்கு வரும் போது பாடங்களை நன்கு படித்து வர அறிவுறுத்தி வழியனுப்பினேன். அப்போது சுதனை நிறுத்தி மரக் கன்றை கொண்டு வந்திருக்கும் செய்தியை கூறினேன். நடுவது எங்கே என்று கேட்டதற்கு playground என பதில் வந்தது. Let God bless him abundantly    

மதியம் சுதனிடம் என் வேம்புகளை  எடுத்துச் செல்ல சொல்லியிருக்கிறேன். மற்றவை அடுத்த போஸ்ட்-ல் தொடர்கிறேன். என் வேம்பு நல்லிடம்சென்று விடுவாள் என்ற நம்பிக்கையுடன் நான் முத்தாரம். 

வியாழன், 1 செப்டம்பர், 2016

எழுதுகிறேன் ஒரு கடிதம் !

அன்பும் பண்பும் பாசமும் மிகுந்த அப்பா அம்மாவிற்கு,
                        தங்கள் செல்ல மகள் வரையும் அன்பின் நகல். ஆம் இது மடல் அல்ல! என் நகல்.
                       கடவுளின் சந்நிதியில் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் நலமாக உள்ளதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன்.
           பார்க்கும் இடங்களெல்லாம் நீங்களே நிறைந்து உள்ளீர்கள்!
                       அப்பா அறிவது! நான் பேசும் சாமர்த்தியத்தை உங்களிடம் கற்றேன். உங்கள் தொழில் பக்தி எனக்குள்ளும் நிறைந்து உள்ளது. ஆனால் என்ன செய்தாலும் உங்கள் punctuality மட்டும் எனக்கு வரவில்லை. மன்னிக்கவும். என்னிடம் உள்ள உங்கள் பண்பு உங்கள் பேச்சு எனக்கு பல வேளைகளில் பிழைக்கத் தெரியாதவள் என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது.
                      அம்மா! நான் உங்களை மிகவும் இழந்ததாக உணர்கிறேன். யாரேனும் தன் பெண்ணை போற்றிப் பாதுகாக்கிறார்கள் என்றால் நான் உங்களை பற்றி எண்ணி மிகவும் ஏங்குகிறேன். மேலும் அவர்களின் நன்மைக்காவும் பிரார்த்திக்கிறேன். எத்தகு பெரிய ஹோட்டலில் உண்டாலும் அன்னையே நீ செய்து தந்த ரேஷன் கொட்டை அரிசி சாப்பாட்டிற்கு கூட ஈடாகவில்லை. வருமானத்திற்கு ஏற்ப நீவிர் செலவு செய்தீர். ஆனால் செலவிற்கு ஏற்ற வருமானத்திற்காக நாங்கள் அலைகிறோம். ஏனெனில் வாழ்வியல் முன்னேற்றம் என்பது இப்போது ஒரு சமூக அங்கீகாரம் என்று ஆகி விட்டது.