வியாழன், 1 செப்டம்பர், 2016

எழுதுகிறேன் ஒரு கடிதம் !

அன்பும் பண்பும் பாசமும் மிகுந்த அப்பா அம்மாவிற்கு,
                        தங்கள் செல்ல மகள் வரையும் அன்பின் நகல். ஆம் இது மடல் அல்ல! என் நகல்.
                       கடவுளின் சந்நிதியில் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நான் நலமாக உள்ளதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நானறிவேன்.
           பார்க்கும் இடங்களெல்லாம் நீங்களே நிறைந்து உள்ளீர்கள்!
                       அப்பா அறிவது! நான் பேசும் சாமர்த்தியத்தை உங்களிடம் கற்றேன். உங்கள் தொழில் பக்தி எனக்குள்ளும் நிறைந்து உள்ளது. ஆனால் என்ன செய்தாலும் உங்கள் punctuality மட்டும் எனக்கு வரவில்லை. மன்னிக்கவும். என்னிடம் உள்ள உங்கள் பண்பு உங்கள் பேச்சு எனக்கு பல வேளைகளில் பிழைக்கத் தெரியாதவள் என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது.
                      அம்மா! நான் உங்களை மிகவும் இழந்ததாக உணர்கிறேன். யாரேனும் தன் பெண்ணை போற்றிப் பாதுகாக்கிறார்கள் என்றால் நான் உங்களை பற்றி எண்ணி மிகவும் ஏங்குகிறேன். மேலும் அவர்களின் நன்மைக்காவும் பிரார்த்திக்கிறேன். எத்தகு பெரிய ஹோட்டலில் உண்டாலும் அன்னையே நீ செய்து தந்த ரேஷன் கொட்டை அரிசி சாப்பாட்டிற்கு கூட ஈடாகவில்லை. வருமானத்திற்கு ஏற்ப நீவிர் செலவு செய்தீர். ஆனால் செலவிற்கு ஏற்ற வருமானத்திற்காக நாங்கள் அலைகிறோம். ஏனெனில் வாழ்வியல் முன்னேற்றம் என்பது இப்போது ஒரு சமூக அங்கீகாரம் என்று ஆகி விட்டது.
                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக