புதன், 10 ஜூன், 2015

க(ன்)னியும் மாங்கனியும்

ஜூன் மாதம் பத்து நாட்கள் சென்று விட்டன. கிட்டத்தட்ட மாம்பழ சீசன் முடியப் போகிறது. இன்னும் முழுதாக ஒரு பழம் கூட இனிதாக சாப்பிட முடியவில்லை. இன்று இரயிலில் கோடம்பாக்கம் கடந்து வந்த போது ஒரு வீட்டில் மரத்திலேயே பழுத்து தொங்கிய பழத்தைப் பார்த்த போது மனது அந்த எட்டாக் கனியைப் பறித்து உண்ண துடித்தது. இனி வரும் காலத்தில் ஒவ்வொருவரும் தானே மரம் வளர்த்து அம்மரத்தில் விளையும் கனியை பறித்து உண்பதுவே நம்பகமானதாகும். அது இயலாத பட்சத்தில் கார்பைடு கல்லை மனதில் இருந்து தூக்கி விட்டு ரிஸ்க் எட்த்து சாப்பிட்டால் மட்டுமே மாங்கனியை உண்ணலாம். இப்படி இருந்த என் மன ஓட்டத்தில் மாங்கனியும் கன்னியும் ஒரு விதத்தில் ஒன்று தான் எனப் பட்டது.

தானே கனிய வேண்டிய கனியை கார்பைடால்  கனிவிக்கிறார்கள். தானே காதல் கனியாததால் அமிலம் வீசி முகத்தை கன்றிப் போக வைக்கிறார்கள். இப்பொழுது சொல்லுங்கள், க(ன்)னியும் மாங்கனியும்  ஒன்றுதானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக