செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நான் இன்று ஆசிரியையாக இருப்பதற்கு மாணவர்களே காரணம். எப்படி?


காரணங்கள் இதோ.


அவர்கள் என்னை மதிக்கிறார்கள். அது தரும் போதை அளப்பரியது. சிலர் மதிப்பது போல் நடித்திருக்கலாம். ஆனால் இன்று என்னவாக இருக்கிறேனோ அதற்கு என் மாணவர்களே காரணம். 


சந்தேகங்கள் எழுப்புவதன் மூலம் என்னை மேலும் படிக்கத் தூண்டுகிறார்கள்.  சிலர் எனக்குத் தெரிகிறதா என் அறிய கேட்டிருக்கலாம். ஆனால் அவர்களையும் திருப்திப்படுத்த நான் மிகையாகப் படிக்க வேண்டியிருக்கிறது. 
 அடாவடியாக நடப்பதன்  மூலம் இப்படியும் ஆட்கள் உள்ளார்கள் என தெரிவிக்கிறார்கள். எனவே இது போன்ற ஆட்களை எப்படி ப[ண்]யன்படுத்துவது என என் மூளையை துருப்  பிடிக்கா வண்ணம் பயன்படுத்துகிறேன். 


சில மாணவர்கள் ஒரு தடவை சொன்னாலே புரிந்து கொள்வர். சிலருக்கு சில தடவை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும். பலருக்கு பல தடவை கூற வேண்டியிருக்கும். இதன் மூலம் பொறுமையை எனக்கு கற்பித்திருக்கிறார்கள்.



பல நேரங்களில் தவறுகளுக்காகக் கடிந்திருப்போம். அவற்றை மறந்து மன்னிக்கக் கூடியவர்கள். சில நேரங்களில் தவறு செய்யாமல் கூட திட்டு வாங்கியிருப்பார்கள். ஆனாலும் மன்னிப்பார்கள். [வேறு வழி இல்லை ]

மிக மிக மிக முக்கியமாக நான் படித்த syllabus மிகப் பழையதாக இருந்திருக்கும். ஆனால் இன்றைய மாணவர்களின் அறிவுத் திறனுக்கு தீனி போட வேண்டி புது syllabus படி பாடம் நடத்த தூண்டுகோலாய் இருக்கிறார்கள் 


எனவே மாணவர்களே என்னையும் ஆசிரியையாக அங்கீகரித்த உங்கள் அத்துணை நல்லுள்ளங்களுக்கும் நன்றி!

வாழ்க  நீவிர்! எனவே வளர்வோம் நாங்கள்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக